ஒரு பூந்தோட்டமும் போர்க் களமும்
பூந்தோட்டம் முகாம் (இலங்கை):
இலங்கையின் பூந்தோட்டம் அகதிகள் முகாமில் வசித்து வரும் தமிழர்கள், தங்களதுபகுதியில் எப்போது அமைதி திரும்பும், மகிழ்ச்சிகரமான, இயல்பான வாழ்க்கைக்குஎப்போது திரும்புவோம் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.
இலங்கையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் வெறித்தாக்குதலை தொடங்கியது. அன்று முதல் 60,000க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்உயிரிழந்துள்ளனர்.தொடரும் போர் மற்றும் போர் பதற்றத்தால் வீடுகள், சொத்துக்கள், உறவினர்கள்,குடும்பங்களை இழந்த தமிழர்கள் தங்குவதற்காக இலங்கை அரசு இரண்டு பெரியஅகதிகள் முகாம்களை ஏற்படுத்தியது.
அதில் ஒன்றுதான் பூந்தோட்டம் அகதிகள் முகாம். மிகப் பெரிய முகாமான இங்குஅடிப்படை வசதிகள் சுத்தமாக கிடையாது.
மாடுகளை அடைத்து வைத்திருப்பது போல அப்பாவித் தமிழர்களை இங்குஅடைத்துப் போட்டுள்ளது இலங்கை அரசு.
பூந்தோட்டம் முகாமில் 4,000 தமிழர்கள் உள்ளனர். இந்த முகாம் வவுனியாமாவட்டத்தில் உள்ளது. வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே அரசு வசம்உள்ளது. மற்ற பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. அரசுவசம் உள்ள பகுதியில்தான் இந்த அகதிகள் முகாம் உள்ளது.
இலங்கையில் மொத்தம் 3,15,000 தமிழர்கள் அகதிகளாக உள்ளதாக ஐ.நா. சபையின்அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கணக்கிட்டுள்ளது. இவர்களில் 67,000 பேர்முகாம்களில் வசிக்கின்றனர். 2,47,000 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்களின்வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவர்கள் தவிர 1,25,000 லட்சம் தமிழர்கள் வெளிநூடுகளில் தஞ்சம்அடைந்துள்ளனர். இவர்களில் 68,000 பேர் இந்தியாவில் (தமிழகத்தில்) வசித்துவருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் போர் பதட்டம் ஏற்படத் தொடங்கியதும், 3000க்கும்மேற்பட்ட தமிழர்கள் படகுகள் மூலம் தமிழகத்திற்குத் தப்பிச் சென்றனர். இன்னும்40,000 பேர் தமிழகத்திற்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
தமிழர்கள் தங்களது சொத்துக்கள், உறவுகளை விட்டு வேறு இடத்திற்குப் போகமுக்கிய காரணமே பாதுகாப்பின்மைதான். தங்களது உயிருக்கும், உடமைகளுக்கும்பாதுகாப்பில்லை என்ற நிலை உள்ளபோது தமிழர்களால் எப்படி அதே இடத்தில்நிம்மதியாக வசிக்க முடியும்? பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் தமிழர்கள் இடம் பெயர்வதை தடுக்க முடியும். இல்லாவிட்டால்அகதிகள் அதிகரித்தத்தான் செய்வார்கள் என்று வவுனியா மாவட்ட அரசுஅதிகாரியான சண்முகம் கூறுகிறார்.
இனப் போரால் வவுனியா மாவட்டத்தில் பொருளாதாரம் மிகக் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வயல்கள் வறண்டுபோய் விட்டன. இங்கு பயிரிடுவது என்பதே இல்லாமல் போய் விட்டது.
பாதுகாப்புப் படையினர் வசம் உள்ள இந்த முன்னாள் வயல்களில் தண்ணீர் கூடஇல்லாமல் வற்றிப் போய் விட்டது என்று கூறும் சண்முகம், கிட்டத்தட்ட 30 சதவீதம்பேர் இந்த மாவட்டத்தில் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்றார்.
பூந்தோட்டம் அகதிகள் முகாம்களில் இருப்பவர்கள் போர் எப்போது ஓயும்,அமைதியான வாழ்க்கைக்கு எப்போது திரும்புவோம் என்ற எதிர்பார்ப்புடனும்,கவலையுடனும் நாட்களை கடத்தி வருகிறார்கள்.
இங்கு தங்கியுள்ள கிருஷ்ணசாமி ராஜா தனது இளம் வயதை இங்குதான் அதிகம்கழித்துள்ளார். இப்போது அவருக்கு 31 வயதாகிறது. விடுதலைப் புலிகளின்கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சியிலிருந்து 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்தமுகாமுக்கு இடம் பெயர்ந்தார் கிருஷ்ணசாமி ராஜா.
20 குடும்பங்களுக்கு ஒரு பெரிய அறை ஒதுக்கப்படுகிறது. கிருஷ்ணசாமி ராஜாவுடன்அவரது 5 வயது மகளும் தங்கியுள்ளார்.
இங்கே வாழ்க்கை மிகவும் கடினமாக இருக்கிறது. நான் முன்பு வசித்த வாழ்க்கைக்கும்,இப்போதைய வாழ்க்கைக்கும் இடையே ஏராளமான வித்தியாசம் உண்டு. இதுவாழ்க்கையே இல்லை.
கிளிநொச்சிக்கு மீண்டும் போகும் வாய்ப்பே இல்லை. அங்கு நான் வசித்த பகுதிமுழுவதும் போர்க்களமாகி விட்டது. எனது வீடு உள்பட அப்பகுதியில் உள்ள வீடுகள்அனைத்தையும் இலங்கை ராணுவம் நிர்மூலமாக்கி விட்டது என்கிறார் ராஜா.
ராஜாவுக்கு வாரத்திற்கு 2 நாட்களுக்குத்தான் வேலை கிடைக்கும். என்ன வேலைகிடைத்தாலும் பார்க்கிறார் ராஜா. இவரைப் போல இங்கு வசிக்கும் தமிழர்களுக்குஅரசு ரேஷன் மூலம் அரிசி போன்ற பொருட்களைக் கொடுக்கிறது. அத்தனையும் தரம்இல்லாதவையாக இருக்கின்றன.
பொருட்களை வைக்கக் கூட சரியான இடம் இல்லாமல் இங்குள்ள தமிழர்கள்அவதிப்படுகிறார்கள். காரை பெயர்ந்து போன சுவரை அழகாக்குவதற்காகசெய்தித்தாள்களை ஒட்டி வைத்துள்ளார் ராஜா. நீண்ட அறையின் ஒரு மூலையில்அடுப்பு உள்ளது. ஆனால் அங்கு சமைத்தே பல நாட்களாகி விட்டதாம்.
வவுனியா அரசு அதிகாரியான சண்முகம், போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்துபோன தமிழர்களை வேறு பகுதிகளில் குடியமர்த்த தீவிரமாக முயற்சித்து வருகிறார்.ஆனால் இதில் பல பிரச்சினைகள் உள்ளன.
மறு குடியமர்த்தலுக்குத் தேவையான நிதியை இலங்கை அரசு றையாக தருவதில்லை.மேலும், உள்ளூர்க்கார்கள், வெளியூர்க்காரர்களை கொண்டு வர எதிர்ப்புதெரிவிக்கின்றனர். மேலும், வேறு பகுதிகளில் குடியேற தமிழர்களில் பலர் தயாராகஇல்லை.
மீண்டும் நல்ல நிலை திரும்பும், பழைய இடங்களுக்கே போவோம் என்று அவர்கள்கூறி வருகின்றனர் என்கிறார் சண்முகம்.
55 வயதான கார்த்திகேசு சரோஜினிதேவியின் நிலை மிக மோசம். எட்டுஆண்டுகளுக்கு முன்பு இவர் பூந்தோட்டம் முகாமுக்கு வந்தார். அவரது ஒரு குழந்தைபோரில் கொல்லப்பட்டு விட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டையும்ராணுவம் கையகப்படுத்தி விட்டது. இதனால்தான் அவர் முகாமுக்கு வர நேரிட்டது.
மகாமில் உள்ள தமிழர்கள் இணைந்து ஒரு கமிட்டியை ஏற்படுத்தி தங்களதுகுறைகளை அரசுக்குத் தெரிவித்து வருகின்றனர். மீண்டும் போர் ஏற்பட்டால் நாங்கள்எங்கே போவது, இங்கு பல வருடங்களாக வசித்து வருகிறோம். எங்களுக்கென்றுஇப்போது எந்த இடம் இல்லை. எல்லாம் போய் விட்டது. எனவே எங்களுக்கென்றுநிரந்தர வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று அரசிடம் கோரியுள்ளோம்.
அந்த இடத்திற்கு நாங்கள் இடம்பெயர விரும்புகிறோம். மீண்டும் அமைதி திரும்பவேண்டும் என்று நாங்கள் மனமுருக பிரார்த்தித்து வருகிறோம். அப்போதுதான்நாங்கள் மீண்டும் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்கிறார் சரோஜினி.
இரு பூக்களும் ஒரு போர்க் களமும் என்று வைரமுத்து எழுதியது மாதிரி.. இந்த பூந்தோட்டத்தைச் சுற்றிலும்துப்பாக்கிகளின் ஓசை.. மரண ஓலம் தான்.
இலங்கைக்கு இந்திய ரேடார்கள்:
இந் நிலையில் இலங்கைக்கு, இந்தியா 2 இந்திரா ரக ரேடார்களை இலவசமாக தந்துள்ளது.
விமானத் தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்த ரேடார்கள் உதவும். கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பின்இலங்கைக்கு ராணுவ கருவியை இந்தியா தந்துள்து.
விடுதலைப் புலிகளிடம் சிறிய ரக விமானங்கள் இருப்பதாக இலங்கை கூறி வருகிறது. அதிலிருந்து பாதுகாப்புஅளிக்க இந்த ரேடார்களை இந்தியா வழங்கியுள்ளது.
அகதிகள் வருகை அதிகரிப்பு:
இதற்கிடையே இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு கடந்த 2 நாட்களில் 130 தமிழர்கள் அகதிகளாக வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக அகதிகள் வருகையில் தேக்க நலை காணப்பட்டது. ஆனால் 2 நாட்களாக அதிக அளவில் அகதிகள் வரத் தொடங்கியுள்ளனர்.
நேற்று 25 குடும்பங்களைச் சேர்ந்த 65 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். இவர்கள் தனுஷ்கோடியில உள்ள அரிச்சமுனை மற்றும் ஓலைக்குடா, வேதாலை,அந்தோணியார் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு வந்து சேர்ந்தனர்.
இவர்கள் திரிகோணமலை, யாழ்ப்பாணம், தலைமன்னார், பேசாலை, கொடிகாமம், நந்தீஸ்வரன் மலை, வவுனியா, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளைச்சேர்ந்தவர்கள்.
இன்று காலை 17 அகதிகள் வந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்திற்கு கடந்த சில மாதங்களில் வந்துள்ள அகதிகளின் எண்ணிக்கை 3,500யைத் தாண்டிவிட்டது.












Click it and Unblock the Notifications