அகதிகளிடம் குறை கேட்ட திருமாவளவன்
மண்டபம்:
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகளை சந்தித்துவிடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் குறை கேட்டார்.
இலங்கையிலிருந்து தமிழகம் வரும் அகதிகள் மண்டபத்தில் உள்ள அகதிகள்முகாக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இங்கிருந்து பல்வேறு முகாம்களுக்குப்பிரித்து அனுப்பப்படுகிறார்கள். பெரும்பாலும் மண்டபம் முகாமிலேயேபெரும்பாலான அகதிகள் தங்கியுள்ளனர்.மண்டபம் முகாம் உள்ளிட்ட அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகள் சரியாகஇல்லை என்று புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க 2 அமைச்சர்களை கொண்டகுழுவை சமீபத்தில் கருணாநிதி அனுப்பி வைத்திருந்தார். அந்தக் குழுவும்,அகதிகளின் நிலை படு மோசமாக இருப்பதாக முதல்வருக்கு அறிக்கை ஒன்றைத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன்மண்டபம் முகாக்குச் சென்று அகதிகளை சந்தித்தார். அவர்களிடம் எப்படிஇருக்கிறீர்கள், வசதிகள் போதுமானதாக உள்ளதா, என்ன குறைகள் உள்ளது என்பதுகுறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அகதிகள் முகாமையும் திருமாவளவன் சுற்றிப் பார்த்தார். அதன்பின்னர்அகதிகள் குறை தீர்ப்பு துணை ஆட்சியரையம் சந்தித்து மனு கொடுத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அகதிகள் முகாமில் அடிப்படைவசதிகள் போதுமானதாக இல்லை. அங்கு பகலில் மின்சார விநியோகம் அறவேகிடையாது. இரவில் மட்டுமே மின்சாரம் கொடுக்கிறார்கள். கழிப்பறை வசதிகளும்சரியாக இல்லை. பெண்கள் இதனால் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
கட்டடங்கள் அனைத்தும் மிகவும் பாழடைந்து போய் உள்ளன. பல கட்டடங்கள்எப்போது இடியுமோ என்ற நிலையில் உள்ளன. அடிப்படை வசதிகள் அறவேசரியில்லாத நிலையில் மண்டபம் முகாம் உள்ளது. எனவே அகதிகளின் நிலையைக்கருத்தில் கொண்டு இந்த அவல நிலையைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications