ஹனிமூன் கொலை: போலீஸ் காவலில் வித்யா!
மூணாறு:
மூணாறு தேனிலவுக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வித்யா, ஆனந்த்,அன்புராஜ் ஆகியோரை 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கேரளநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை பம்மல் சங்கர் நகரைச் சேர்ந்த அனந்தராமன், கேரள மாநிலம் மூணாறுக்குதேனிலவுக்கு சென்றபோது கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அனந்தராமனின்மனைவி வித்யா, அவரது காதலர் ஆனந்த், அவரது கூட்டாளி அன்புராஜ் ஆகியோரைபோலீஸார் கைது செய்தனர்.பள்ளிக் காலத்திலிருந்தே காதலித்து வந்த ஆனந்த்தை மறக்க முடியாமல் தனதுகணவரை திட்டமிட்டு வித்யா கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.கேரள மாநிலம் தேவிகுளம் முன்சீப் கோர்ட்டில் அவர்களை ஆஜர்படுத்திய கேரளபோலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸ் காவலில் விடக் கோரி மூணாறு போலீஸார்தேவிகுளம் நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
ஆனால் வித்யாவை போலீஸ் காவலில் விடக் கூடாது, அவர் அப்பாவி என்று அவரதுதரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இந்த நிலையில் வித்யா, ஆனந்த், அன்புராஜ்ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வித்யா தனது எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக காணப்பட்டார். முகத்தைதுப்பட்டாவால் மூடியிருந்தர்.
அப்போது நீதிபதி, வித்யாவின் முகத்தை மூடியிருந்த துப்பட்டாவை விலக்குமாறுகேட்டுக் கொண்டார். இதையடுத்து தனது துப்பட்டாவை அகற்றினார் வித்யா.
பின்னர் 3 பேரையும் போலீஸ் காவலில் அனுப்பி உத்தரவிட்ட நீதிபதி 30ம் தேதிமாலை 5 மணிக்கு மூன்று பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேணடும்என்றும் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்துகொண்டு சென்றனர். சென்னைக்கு சென்று விசாரிக்கும் திட்டம் இதுவரை இல்லைஎன்றும் முதலில் வித்யா உள்ளிட்டோர் கேரளாவில் எங்கெங்கு சென்றார்கள்என்பதை விசாரித்து விட்டு அந்த இடங்களுக்கு குறிப்பாக குருவாயூருக்கு நேரில்அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கேரள போலீஸார்தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications