தூக்கப்படுகிறார் நரேஷ் குப்தா? இணை தேர்தல் அதிகாரிகளுக்கு கல்தா!
சென்னை:
இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றி வந்த 2 பேரின் பணிநீட்டிப்பை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரிநரேஷ் குப்தாவும் மாற்றப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக நரேஷ் குப்தாவும் இணைத் தலைமைத்தேர்தல் அதிகாரிகளாக பிரகதா மற்றும் ராமன் ஆகியோர் உள்ளனர்.இவர்களில் பிரகதாவின் பதவிக்காலம் முடிந்து விட்டது. அவர் கடந்த நான்கரைவருடங்களாக பணி நீட்டிப்பில் இருந்து வந்தார். அதேபோல ராமன் கடந்த ஒருவருடமாக பணி நீட்டிப்பில் இருந்து வந்தார்.
தற்போது இருவரது பணி நீட்டிப்பையும் தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதற்குமத்திய தேர்தல் ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது.
தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் சில மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகொடுக்கப்படாமல் உள்ளது. இவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும்என்பதற்காகவே இரு இணை தேர்தல் அதிகாரிகளையும் அரசு வீட்டுக்குஅனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவையும் வேறு துறைக்குமாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுகவின் கடும் விமர்சனங்களையும்,ஆட்சேபனைகளையும் சம்பாதித்தவர் நரேஷ் குப்தா என்பது குறிப்பிடத்தக்கது.
குப்தாவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று கருணாநிதியே பகிரங்கமாககுற்றம் சாட்டியிருந்தார். இதேபோல ஜெயலலிதாவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து அப்போது குப்தாவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தேர்தல்ஆணையத்தின் செயல்பாட்டில் திருப்தி இல்லாவிட்டால் தாராளமாக என்னைமாற்றிவிடலாம். அதற்கான வசதிகள் நிறையவே உள்ளன என்று பதிலளித்திருந்தார்.
இந் நிலையில் முதல் கட்டமாக இணை தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழகஅரசு ஆப்பு வைத்துள்ளது. அடுத்து குப்தாவின் தலையும் உருளலாம் எனத்தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications