கொலை செய்வதுதான் எங்களது வேலையா? பாப்பா சுந்தரம், மகன் குமுறல்!
குளித்தலை:
ஒரு ஆசிரியையைக் கடத்திக் கொல்வதுதான் எங்களது வேலையா? எங்களுக்கும்குடும்பம் இருக்கிறது. அதை விட்டு விட்டு கடத்திக் கொல்லும் அளவுக்கு நாங்கள்இல்லை என்று குளித்தலை ஆசிரியை மீனாட்சி வழக்கில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளமுன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் மற்றும் அவரது மகன் கருணாகரன்ஆகியோர் கூறியுள்ளனர்.
ஒன்னேக்கால் ஆண்டுகளுக்க முன்பு காணாமல் போன ஆசிரியை மீனாட்சி வழக்குசமீபத்தில் புதிய திருப்பத்தைக் கண்டது. ஆசிரியை கடைசியாக காணப்பட்பணிக்கம்பட்டி அருகே உள்ள கிராமத்தில் ஒரு எலும்புக் கூடுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.எலும்புக் கூட்டின் மீது இருந்த சேலை உள்ளிட்ட பொருட்கள் மீனாட்சியுடையதுஎன்று அவரது கணவர் மற்றும் உறவினர்கள், உடன் வேலை பார்த்த ஆசிரியைஆகியோர் அடையாளம் காட்டியுள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. தற்போது வழக்குவிசாரணையை முடுக்கி விட்டுள்ள சிபிசிஐடி போலீஸார் முன்னாள் அதிமுகஎம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாகரன், உறவினர் ரங்கநாதன்உள்ளிட்டோரை மீண்டும் விசாரித்து வருகின்றனர்.
மேலும், பாப்பா சுந்தரம் உள்ளிட்ட 32 பேரை விசாரணைக்கு வருமாறு குளித்தலைவட்டாட்சியரும் (தாசில்தாரும்) சம்மன் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் ஆசிரியைமீனாட்சியைக் கொல்வதுதான் எங்களது வேலையா என்று கருணாகரன் கோபமாககேட்டுள்ளார்.
இதுகுறித்து பாப்பா சுந்தரம் கூறுகையில், மீனாட்சியின் எலும்புக் கூடுகண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக என்னிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணைநடத்தியதாக வெளியாகியுள்ள செய்தி தவறு.
என்னை யாரும் விசாரிக்கவில்லை. தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும்,என்னையும், எனது குடும்பத்தினரையும் போலீஸார் விசாரிக்கலாம்.
போலீஸ் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். போலீஸார் இன்னும்துரிதமாக செயல்பட்டு உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த விவகாரத்திற்கும், எனக்கும், எனது குடும்பத்திற்கும் எந்த சம்பந்தம் இல்லை.நான் நிரபராதி என்றார் பாப்பா சுந்தரம்.
அப்போது அருகில் இருந்த அவரது மகன் கருணாகரன் கூறுகையில், கடந்த 2வருடங்களாக இந்த வழக்கில் எங்களை சம்பந்தப்படுத்தி செய்திகள் வந்துகொண்டுள்ளன.
எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அதைப் பார்ப்பதை விட்டு ஒரு ஆசிரியையைகடத்திச் சென்று கொலை செய்வதுதான் எங்களது வேலையா? என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications