ஐயப்பன் நகைகளைப் பறிக்க முயற்சி: ராஜகுடும்பம் புகார்
திருவனந்தபுரம்:
ஐயப்பனின் நகைகளை அபகரிக்க திருவாங்கூர் தேவஸ்தானம் முயற்சி செய்கிறதுஎன்று பந்தளம் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சபரிமலை சர்ச்சை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது. நடிகைகள் கோவிலுக்குள்போனது எப்படி, அவர்களை அனுமதித்தது யார் என பல்வேறு தரப்பிலிருந்தும்திருவாங்கூர் தேவஸ்தானம் மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்கள் பாயத்தொடங்கியுள்ளது.இப்போது பந்தளம் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டைசுமத்தியுள்ளனர்.
பந்தளம் ராஜாவின் மகன்தான் ஐயப்பன் என்பது நம்பிக்கை. ஐயப்பனுக்குஅணிவிக்கப்படும் நகைகள் (திருவாபரணம்) ராஜ குடும்பத்தினருக்குச் சொந்தமானது.
இந்த நகைகள் விசேஷ நாட்களின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். பந்தளம்அரண்மனையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நகைகளை அபகரிக்க திருவாங்கூர்தேவஸ்தானம் முயல்வதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பந்தளம் அரண்மனை நிர்வாக சமிதி தலைவரும், ராஜகுடும்ப வாரிசுமானவிசாகம் நாள் ராமவர்ம ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் அனைத்தும் அரண்மனையின்கட்டுப்பாட்டில் உள்ளது. இதை எங்களிடமிருந்து பறிக்க தேவஸ்தானம் முயலுகிறது.
ஐயப்பன் கோவிலுக்கும், அரண்மனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிநகைகளைப் பறிக்க தேவஸ்தானம் முயல்கிறது.
நகைப்பெட்டிகளின் சாவிகளைக் கொடுக்குமாறு முன்பே தேவஸ்தான அதிகாரிஒருவர் எங்களிடம் கேட்டார். ஆனால் நாங்கள் மறுத்து விட்டோம். இப்போதும் அந்தமுயற்சியை தேவஸ்தானம் விடவில்லை.
தேவ பிரசன்னம் பார்ப்பதில் பெரும் சதி உள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.அதுகுறித்து சர்ச்சைகளும், சந்தேங்களும் எழுந்துள்ளதால், உயர்நீதிமன்றம் அல்லதுஅரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் ராமவர்மா.
ஜெயமாலாவை விசாரிக்க குழு:
சபரிமலை ஐயப்ப சாமி சிலையை நடிகை ஜெயமாலா தொட்டுக் கும்பிட்ட விவகாரம் குறித்து கண்காணிப்புக்குழு விசாரணை நடத்தும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இது குறித்து தேவசம் போர்டு தலைவர் ஜி. ராமன் நாயர் கூறியதாவது,
கன்னட நடிகை ஜெயமாலா விசாரணை நடத்தி அவர் கூறுவதில் உண்ணை உள்ளதா? என்பதை கண்டறியஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து, தேவசம்போர்டு சார்பில் விசாரிக்க கண்காணிப்புக் குழுநியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு பெங்களூர் சென்று ஜெயமாலவிடம் விசாரணை நடத்தும், அத்துடன் நடிகை ஜெயமாலா சபரிமலைசென்று ஐயப்ப சாமியை தொட்டு வணங்கிய போது அங்கு இருந்த தந்திரி மற்றும் கோயில் அதிகாரிகளிடமும்இந்தக் குழு விசாரணை நடத்தும்.
இந்தக் குழு கொடுக்கும் அறிக்கை மீது 7ம் தேதி திருவிதாங்கூர் தேவசம் போர்டு பரிசீலித்து தேவையானநடவடிக்ககைகளை மேற்கொள்ளும். நீதி விசாரணைக்கு உத்தரவிடுவதா? அல்லது குற்றப் பிரிவு போலீஸ்விசாரணைக்கு உத்தரவிடுவதா? என்பது பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications