மேயர் தேர்தல்-வருகிறது சட்டத் திருத்தம்
சென்னை:
கவுன்சிலர்களே மேயரை தேர்ந்தெடுக்கும் பழைய நடைமுறையை மீண்டும்அமல்படுத்த தமிழக அரசு யோசித்து வருகிறது. இதுதொடர்பாக சட்டத் திருத்தமும்கொண்டு வரப்படவுள்ளது.
தமிழகத்தில் 6 அடுக்கு உள்ளாட்சி முறை அமலில் உள்ளது. இதில் மாநகராட்சிமேயர், நகராட்சித் தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.தொடர்பான செய்திகள்பு கவுன்சிலர்களே நகராட்சித் தலைவர்களையும், மேயர்களையும்தேர்ந்தெடுத்தனர். பஞ்சாயத்து ராஜ் சட்டம் முழுமையாக அமலுக்கு வந்தபோது இந்தபழைய நடைமுறைக்கு விடை கொடுக்கப்பட்டது.
இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டன. அதாவது, ஒரு மாநகராட்சிக்கு கவுன்சிலர்கள்ஒரு கட்சியைச் சேர்ந்தவர்களாகவும், மேயர் இன்னொரு கட்சியைச் சேர்ந்தவராகவும்இருந்து விட்டால், நிர்வாகத்தை நடத்திச் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
மேயரின் முடிவுகளுக்கு பெரும்பான்மை கவுன்சிலர்களைக் கொண்ட கட்சிஒத்துழைப்பு தராத நிலை சில மாநகராட்சிகளில் ஏற்பட்டது.
குறிப்பாக சென்னை மாநகராட்சியில் அதிமுக உறுப்பினர்களே பெரும்பான்மையாகஉள்ளனர்.
ஆனால் மேயர் பதவி திமுகவிடம் இருந்தது. ஸ்டாலின் விலகிய பின்னர் துணைமேயராக இருந்து வந்த கராத்தே தியாகராஜன் (அப்போது அதிமுகவில் இருந்தார்)சபையை நடத்தி வந்தார்.
இப்போது கராத்தே தியாகராஜன் காங்கிரஸில் சேர்ந்து விட்டார். இதனால் சபையைநடத்துவதில் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன.
இதே நிலைதான் மற்ற மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் உள்ளது.
இந்த குழப்ப நிலையைப் போக்க பழைய நடைமுறையை மீண்டும் கொண்டு வரதமிழக அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி நகராட்சி அல்லது மாநகராட்சிகளில் பெரும்பான்மையாக உள்ளகட்சிகளைச் சேர்ந்தவர்களே மேயர்களாகவோ, தலைவர்களாகவோ வர முடியும்.இதன் மூலம் நிர்வாக முடிவுகளை எடுப்பதில் சிக்கல் வராது என அரசு கருதுகிறது.
பழைய முறையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக பஞ்சாயத்து ராஜ்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.












Click it and Unblock the Notifications