புதுவை உள்ளாட்சி தேர்தல்: காங்-திமுக முன்னணி காரைக்காலில் தேமுதிக முன்னணி, அதிமுக தோல்வி
பாண்டிச்சேரி:
புதுவை உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வெற்றிகிடைத்துள்ளது. அதிமுக இந்தத் தேர்தலில் படு தோல்வி அடைந்துள்ளது.
பாண்டிச்சேரி மாநிலத்தில் 38 ஆண்டுகளுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல்நடந்துள்ளது. மொத்தம் 3 கட்டமாக நடந்த இத்தேர்தலில் 85 சதவீத வாக்குகள்பதிவாகின. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத்தொடங்கியது.புதுவையில் 2 மையங்களிலும், காரைக்காலில் 6 மையங்களிலும், ஏனாம், மாஹேஆகிய இடங்களில் தலா 1 மையத்திலும் வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. 5நகராட்சி தலைவர் பதவிக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது.
புதுவை நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர்ஸ்ரீதேவி 6,000 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னணியில் உள்ளார். உழவர்கரைநகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயபாலும்,ஏனாமில் காங்கிரஸ் வேட்பாளர் சந்திராவும், மாஹவிேல் காங்கிரஸ் வேட்பாளர்ராஜேஷ் பர்வத்தும் முன்னணியில் உள்ளனர்.
காரைக்கால் நகராட்சித் தலைவர் தேர்தலில் விஜயகாந்த்தின் தேமுதிக வேட்பாளர்பிரபாவதி கூடுதல் வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். புதுவை உள்ளாட்சித்தேர்தலில் முதல் முறையாகப் போட்டியிடும் தேமுதிக, முக்கியமான காரைக்கால்நகராட்சித் தலைவர் தேர்தலில் முன்னணி பெற்றிப்பது குறிப்பிடத்தக்கது.
புதுவை நகராட்சி வார்டு தேர்தலுக்கு நடந்த தேர்தலில் திமுக நான்கு வார்டுகளையும்,அதிமுக மற்றும் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
உழவர்கரை நகராட்சி உறுப்பினர் தேர்தலில் திமுக இரண்டிலும், காங்கிரஸ் மற்றும்சுயேச்சை ஆகியோர் தலா ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். இந்த நகராட்சியின்நான்கு வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கனவே வெற்றிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications