இன்று சரணடைகிறார் எஸ்.எஸ்.சந்திரன்?
மதுரை:
வரதட்சணைக் கொடுமை வழக்கில் தலைமறைவாகியுள்ள அதிமுக எம்.பியும்,நடிகருமான எஸ்.எஸ்.சந்திரன் இன்று மதுரை நீதிமன்றத்தில் சரணடையக் கூடும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியனின் மகள் லதா.இவருக்கும் எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன் தனசேகரனுக்கும் இடையே 4ஆண்டுகளுக்கு, திருமணம் நடந்தது.அதன் பின்னர் எஸ்.எஸ்.சந்திரன் குடும்பத்தினர் லதாவை வரதட்சணை கூடுதலாககேட்டு கொடுமைப்படுத்தியதாக லதா தரப்பு கூறுகிறது. இருவரும் கடந்த 1ஆண்டுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.
தனசேகரன், எஸ்எஸ் சந்திரனின் வீட்டில் தான் வசித்து வருகிறார்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன் லதா மதுரை போலீஸில் புகார் கொடுத்தார்.அதன் பேரில் சென்னை வந்த மதுரை போலீஸார் சந்திரன் வீட்டில் அதிரடியாகசோதனை நடத்தி தனசேகரனைக் கைது செய்தனர்.
இந்த வழக்கில் எஸ்.எஸ்.சந்திரனும் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், அவர்தலைமறைவாகி விட்டார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் எஸ்.எஸ்.சந்திரன் இன்றைக்குள் மதுரை அல்லது சென்னைநீதிமன்றத்தில் சரணடையக் கூடும் எனத் தெரிகிறது.
அவரை சரணடைய விடாமல் தடுத்து கைது செய்ய சென்னை மற்றும் மதுரைபோலீஸார் உஷார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையே, கேரளாவில் உள்ள ஒரு திரைப்படத் தயாரிப்பாளின வீட்டில் சந்திரன்பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது.
அதன் பேரில் தனிப்படை போலீஸார் கேரளாவுக்கும் விரைந்துள்ளனர்.
எஸ்.எஸ்.சந்திரன் மாறு வேடத்தில் உலவிக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால் முதலில் முன் ஜாமீன் கோரி மதுரைஅல்லது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பின்னர் வெளியில் வரஅவர் திட்டமிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications