பிரதமர் கோரிக்கை நிராகரிப்பு-என்எல்சிஊழியர்கள் ஸ்டிரைக்- மின் உற்பத்தி பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

நெய்வேலி:

நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பதில்தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளதைஏற்க மறுத்து விட்ட என்.எல்.சி ஊழியர்கள் திட்டமிட்டபடி இன்று இரவு முதல்காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குகினர்.

இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகம் உள்பட தென் மாநிலங்களில்மின்சார தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

நெய்வேலி அனல் மின் கழகத்தின் 10 சதவீத பங்குகளை தனியாரிடம் விற்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஊழியர்கள் கடந்த 26ம் தேதி முதல் பல்வேறுகட்டங்களாக போராடி வந்தனர்.

இந் நிலையில் பங்கு விலக்கல் முடிவை வாபஸ் பெற வேண்டும். அதுமுடியாவிட்டால், அவற்றை ஊழியர்களிடமே விற்று விட வேண்டும் என்று யோசனைகூறி பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.

இதை ஏற்ற பிரதமர் மன்மோகன்சிங், பங்குகளை விற்கும் விஷயத்தில்,தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட சதவீதத்திலான பங்குகளை ஒதுக்க நடவடிக்கைஎடுக்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால் பிரதமரின் இந்தஅறிவிப்பை ஊழியர் சங்கங்கள் நிராகரித்து விட்டன.இதுதொடர்பாக விவாதிக்க அனைத்துத் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கூட்டம்நடந்தது.

அக்கூட்டத்தில் பிரதமரின் கோரிக்கையை முற்றிலும் நிராகரித்து தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு தனது முடிவை முழுமையாக கைவிட வேண்டும்என்று கோரி இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்திற்குப் பின்னர் சிஐடியூ செயலாளர் சங்கிலிப் பாண்டியன் பேசுகையில், 10சதவீத பங்குகளின் மதிப்பு ரூ. 1,100 கோடி ஆகும். இதை தொழிலாளர்கள்வாங்குவது என்றால் ஒரு தொழிலாளிக்கு ரூ. 8 லட்சம் தேவை. இது எப்படிசாத்தியமாகும். இவ்வளவு பணத்துக்கு நாங்கள் எங்கே போவது என்றார்.

கருணாநிதிக்கு சிபிஎம் எதிர்ப்பு:

இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர்வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

என்.எல்.சி.யின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும்அல்லது அவற்றை தொழிலாளர்களுக்கே கொடுக்க வேண்டும் என்று முதல்வர்கருணாநிதி கோரியதை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

10 சதவீத பங்குகளில் குறிப்பிட்ட அளவை தொழிலாளர்களுக்கு விற்பனைசெய்வதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார். என்.எல்.சி. நிறுவனத்தின் 10 சதவீதபங்குகள் என்பது ரூ. 1,100 கோடியாகும். இந்தப் பங்குகளை தொழிலாளர்களால்எப்படி வாங்க முடியும்? அது நடைமுறைக்கு சற்றும் சாத்தியம் இல்லாதது.

தொழிலாளர்கள் வாங்கவில்லை என்று கூறி தனியாருக்கு விற்கவே பிரதமர் மற்றும்முதல்வரின் ஆலோசனை வழி வகுக்கும். எனவே பிரதமர் மற்றும் முதல்வரின்யோசனைகள் ஏற்கக் கூடியதல்ல என்று கூறியுள்ளார்.

இந் நிலையில் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்தொடங்குகிறது. இன்னும் 2 நாட்களில் மத்திய அரசு தனது முடிவை வாபஸ்பெறாவிட்டால் போராட்டத்தைத் தீவிரமாக்கப் போவதாகவும் தொழிலாளர் சங்கங்கள்அறிவித்துள்ளன.

மின்சார உற்பத்தி குறைந்தது:

இதில் சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, எம்எல்எப், பிடிஎஸ், எல்எல்எப், ஏஐசிசிடியூ ஆகியவற்றைச் சேர்ந்ததொழிலாளர்கள், மற்றும் இன்ஜினியர்கள் கூட்டமைப்பு, அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்கின்றனர். இன்றுகாலை முதலே நெய்வேலி மின் நிலையத்தில் எந்த பணியும் நடக்கவில்லை.

இதனால் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவது அடியோடு முடங்கிவிட்டது. இதனால் அனல் மின் உற்பத்தியில்கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நெய்வேலியில் மொத்தமுள்ள 3 அனல் மின் நிலையங்களில் முதல் அனல் மின் நிலையத்தின் தினமும் 600மெகாவாட் உற்பத்தி செய்யப்படும். ஆனால், நேற்றிரவு முதல் அங்கு மின் உற்பத்தி 330 மெகா வாட்டாககுறைந்துவிட்டது.

அதே போல இரண்டாவது அனல்மின் நிலையத்தில் தினமும் 420 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்.அங்கு இன்று காலை 150 மொகவாட் மின்சாரமே தயாரிக்கப்பட்டது.

3வது அனல்மின் நிலையம் 1,470 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. நேற்று இங்கு 650 மெகாவாட்மின்சாரமே தயாரிக்கப்பட்டது.

இதனால் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றிரவு முதல் மின்உற்பத்தி முழுமையாக நின்று விடும் என்று தெரிகிறது.

மூன்று மின் நிலையங்களில் தினமும் 2,490 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு தமிழகம், பாண்டிச்சேரி,கேரளா, ஆந்திரா, கார்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

இதில் 1,040 மெகாவாட் தமிழ்நாட்டுக்கு கிடைத்து வருகிறது. மீதமுள்ள மின்சாரம் 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்துஅளிக்கப்படுகிறது. மின் உற்பத்தி பாதிப்பு காரணமாக நான்கு மாநிலங்களிலும் பாண்டிச்சேரியிலும் மின்வினியோகத்தில் தடை ஏற்படத் தொடங்கி உள்ளது.

என்எல்சி ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்தால் தென் மாநிலங்கள் கடும் நெருக்கடியைசந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை நகருக்குத் தேவையான மினசாரம் வட சென்னை மின் உற்பத்தி நிலையத்தில்இருந்தும், ஆந்திராவில் இருந்தும் கிடைக்கிறது. எனவே சென்னையில் மின் சப்ளை பாதிக்கப்படாது என்றுதெரிகிறது.

ஆனால் மின்சாரத்தை பகிர்வு செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சென்னையிலும் மின் வெட்டுஏற்படும். நகர்ப்பகுதிகளை விட கிரமாங்களில் மின்தடை அதிகமாக இருக்கும்.

என்எல்சி ஊழியர்கள் ஸ்டிரைக் தீவரமாகி விட்டதால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்துநெய்வேலியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+