என்.எல்.சி: நடிகர்கள் போராடலாமே-திருமா

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

என்.எல்.சி. நிறுவன தொழிலாளர்களுக்காக நடிகர், நடிகையர் ஒன்று திரண்டுபோராட்டம் நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

நெய்வேலி விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி சொன்ன யோசனையை பிரதமர்ஏற்றுக் கொண்டுள்ளார். இது விசித்திரமான யோசனை. தொழிலாளர்களும் தனிநபர்கள்தான் என்பது முதல்வருக்குத் தெரியாமல் போனதேன்?

அவர் சொன்ன யோசனையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமே இல்லாத விஷயம்.

நெய்வேலி தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் திரையுலகினர் ஆதரவு தெரிவிக்கவேண்டும். அவர்களுக்காக போராட்டம் நடத்த நடிகர், நடிகைகள் முன் வரவேண்டும்.

வரும் 8ம் தேதி சென்னையில் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு மற்றும் பேரணிநடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்துக் கட்சிகளையும்அழைத்திருக்கிறோம்.

இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்த வகையான உதவியையும் செய்யக் கூடாது.குறிப்பாக ராணுவ ரீதியிலான உதவிகளை கண்டிப்பாக செய்யக் கூடாது. தற்போதுவழங்கி வரும் உதவிகளையும் நிறுத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+