நான் நேர்மையின் நெருப்பு: வைகோ
கோவை:
நான் நேர்மையின் நெருப்பு, ஊழல் கரையான் என்னை நெருங்க முடியாது. நான் நல்லவன் என்ற புகழோடுவாழ நினைப்பன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
கோவையில் மதிமுக தொண்டர்கள் கூட்டம் நடந்தது. இதில் வைகோ பேசியதாவது:மதிமுக நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் பிரிக்க ஆசை வார்த்தை பேசுகிறார்கள். இதற்கு மதிமுகவினர்மயங்கிட மாட்டார்கள். மதிமுகவினருக்கு பணமும் பதவியும் முக்கியமல்ல.
இந்த மாவட்டத்தில் மதிமுக வலுவாக இருப்பது திமுகவை உறுத்துகிறது. இதனால் இங்குள்ளவர்களை என்னிடம்இருந்து பிரிக்க முயல்கிறார்கள். நாங்கள் கொள்கைக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மதிமுகவை அழிக்ககருணாநிதி நினைக்கலாம், அது எப்போதும் முடியாது.
ஓய்வின்றி உழைத்ததால் சோர்வான நான், பலரும் வற்புறுத்தியதால் தான் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளாசென்றேன். ஆனால், இதை கோபாலபுரத்து சூத்ரதாரி திரித்து, நான் விடுதலை புலிகளை சந்திக்க சென்றதாகபொய்யை பரப்புகிறார்கள்.
நான் ஏன் ரகசியமாக சந்திக்கச் செல்ல வேண்டும். புலிகளையோ ஆண்டன் பாலசிங்கத்தையோ சந்திக்கவேண்டுமானால் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இதை வெளிப்படையாக,பகிரங்கமாகவே சொல்கிறேன். ஈழத் தமிழர்களுக்காக மதிமுக என்றும் குரல் கொடுக்கும்.
எனக்கு பய்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகவும், இதன் மூலம் தயாநிதி மாறன் உயிருக்கு என்னால்ஆபத்து உள்ளதாகவும் பிரதமரிடம் புகார் கொடுத்துள்ளனர். மாறனுக்கு எந்தவிதமான பாதுகாப்பையும்கொடுக்கட்டும். அதில் எனக்கு ஆட்சேபனையில்லை.
ஆனால், மதிமுகவுக்கு வன்முறையிலும் தீவிரவாதத்திலும் என்றும் உடன்பாடில்லை என்பதை உண்மை.
வேறு கட்சிக்கு இருக்கும் பணம் பலம் நம்மிடம் இல்லை. திமுகவிடம் இருக்கும் தொலைக்காட்சி பலம் நம்மிடம்இல்லை. ஆனால், கொள்கை உறுதி கொண்ட தொண்டர் பலம் உள்ளது.
திமுகவிடம் அதிகாரம் உள்ளது, கோடிகோடியாய் பணம் உள்ளது. ஆனால், அண்ணா உருவாக்கிய குடும்பப்பாசம் இல்லை. இங்கே நாம் ஒரே குடும்பமாக, பாசமாக உள்ளோம்.
நம் பயணத்தில் எப்போதும் தளர்ச்சி இருக்காது. தொண்டர்களின் உணர்வுகள் தான் எங்கள் கட்சியின் முடிவுகள்.வெற்றியின்போது கட்சியை நடத்துவது எளிது. ஆனால் தோல்விகள் வரும்போது கட்சியை காப்பதுதொண்டர்களே.
கருணாநிதி குடும்பத்தில் இப்போது 6 அதிகார மையங்கள் உள்ளன. அவை தங்கள் சுயநலத்துக்காக கட்சியைநடத்துகின்றன. ஆனால், சிதைவு வரும்போது காப்பாற்றவே முடியாது.
நான் நேர்மையின் நெருப்பு, ஊழல் கரையான் என்னை நெருங்க முடியாது. நான் நல்லவன் என்ற புகழோடுவாழ நினைப்பன்.
தமிவக அரசியல் வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு பலவீனமான ஆட்சி அமைந்திருக்கிறது. அதிமுகதோழர்களோடு இணைந்து உள்ளாட்சித் தேர்தலிலும் நம் கூட்டணியை வெல்ல வைப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications