மத்திய அரசை நான் மிரட்டவில்லை: கருணாநிதி
சென்னை:
என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு நான் மிரட்டல் விடுத்ததாககூறுவது தவறு என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், என்.எல்.சி. பங்குவிலக்கல் முடிவை மத்திய அரசு கைவிடாவிட்டால் ஆட்சிக்கு தரும் ஆதரவை திமுகவிலக்கிக் கொள்ளும் என்று நான் கூறியதாக சில ஏடுகளில் வந்துள்ள செய்திகள்தவறானவை.நான் மத்திய அரசை எச்சரிக்கவும் இல்லை. வடக்கிலும், தெற்கிலும் உள்ள சிலஏடுகள் இவ்வாறு செய்தி வெளியிட்டிருப்பது மிக மிகத் தவறானது.
இந்த நிலையில் திமுக, மத்திய அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது குறித்துயோசித்துக் கொண்டிருக்கிறோம் என்றுதான் நான் குறிப்பிட்டேன்.
மாறாக, மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குத் தரும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டி வரும் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.
நான் சொல்லாத ஒன்று நடக்க வேண்டும் என்றோ, அல்லது கூட்டணிக்குள் பிளவுஎப்போது வரும் என்று காத்திருக்கும் கழுகுகளின் எதிர்பார்ப்புககு ஜனநாயகத்தைஇரையாக்கிட நான் தயாராக இல்லை.
அண்ணா மறைந்த பிறகு நான் முதல்வர் பொறுப்பேற்று டெல்லியில் பிரதமர் இந்திராகாந்தி தலைமையிலான முதல்வர்கள் மாநாட்டில் தன் முதலாக பேசியபோதே,வங்கிகளை தேசியமயமாக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினேன்.
அப்போது துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் எனது கருத்தை மறுத்துப் பேசினார்.ஆனால் சில நாட்களிலேயே 14 வங்கிகளை பிரதமர் இந்திரா காந்திதேசியமயமாக்கினார்.
அதற்காக திமுக சார்பிலும், தமிழக அரசு சார்பிலும், ராஜாஜி மண்டபம் முன்புள்ளமைதானத்தில் பாராட்டு விழா நடத்தினோம். அந்த விழாவில் 14 பொருட்களைபரிசாக வழங்கினேன் நான்.
மேலும் எனது ஆட்சிக்காலத்தில்தான் டி.வி.எஸ்., ராமன் அண்டு ராமன், ஏ.பிடி.,எஸ்.ஆர்.வி.எஸ். ஆகிய நிறுவனங்களின் பேருந்துகளை நாட்டுடமையாக்கினேன்.
அதன் பின்னர்தான் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உருவாகின. என்னைநண்குணர்ந்த நல்லவர்கள் அறிந்த உண்மை இது என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications