அரவிந்த் கண் மருத்துவமனை நிறுவனர் மரணம்
மதுரை:
புகழ் பெற்ற அரவிந்த் கண் மருத்துவனையை நிறுவியரும், மிகச் சிறந்த கண்மருத்துவருமான டாக்டர் ஜி.வெங்கடசாமி மதுரையில் காலமானார். அவருக்கு வயது88.
ஜிவி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் வெங்கடசாமி. தூத்துக்குடிமாவட்டம் வடமலாபுரம் கிராமத்தில் 1918ம் ஆண்டு பிறந்தவர் வெங்கடசாமி.சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த வெங்கடசாமி,ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார்.
அதன் பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை கண் மருத்துவப் பிரிவில்பேராசிரியராக பணியாற்றினார். பிறகு மதுரை மருத்துவக் கல்லூரியின் உதவிஇயக்குநராக பணியாற்றினார்.
அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் பிரபலமான அரவிந்த் கண்மருத்துவமனையை மதுரையில் நிறுவினார். 1976ம் ஆண்டு மதுரையில்தொடங்கப்பட்ட அரவிந்த் மருத்துவமனை வெகு சீக்கிரமே பிரபலமடைந்தது.
மதுரையைத் தொடர்ந்து தேனி, திருநெல்வேலி, கோவை, பாண்டிச்சேரி ஆகியஊர்களிலும் மருத்துவமனைகளைத் தொடங்கினார் வெங்கடசாமி.
தமிழகத்தில் கண் மருத்துவத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது அரவிந்த்மருத்துவமனை. இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்துவதில்முன்னோடி மருத்துவமனையாக அரவிந்த் திகழ்கிறது.
இந்த நிலைக்கு அரவிந்த் மருத்துவமனையை உயர்த்தியதில் வெங்கடசாமியின் பங்குமிகப்பெரியது. தமிழகம் தவிர இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கூட மதுரை அரவிந்த் கண் மருத்துவனைக்குசிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இலங்கை முன்னாள் பிரமதர் ஸ்ரீமாவோ இங்குதான் கண் அறுவைச் சிகிச்சைமேற்கொண்டார். பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள வெங்கடசாமி,பத்பஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் மருத்துவத் துறைக்கே தன்னைஅர்பணித்துக் கொண்டவர் வெங்கடசாமி. இவருக்கு டாக்டர் நாச்சியார் (இவரும்பிரபலமான மருத்துவர்) என்ற சகோதரியும், நல்லகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியஇரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
டாக்டர் வெங்கடசாமியின் உடல் மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டில்வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
வெங்கடசாமியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முதல்வர்கருணாநிதி ஆகியோர் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications