இறுதிப் போட்டியில் இன்று இத்தாலி-பிரான்ஸ் மோதல்!
பெர்லின்:
உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் இன்று பிரான்ஸும்,இத்தாலியும் மோதுகின்றன. சனிக்கிழமை 3வது இடத்திற்கு நடந்த போட்டியில்ஜெர்னி போர்ச்சுகலை வென்றது.
![]() |
ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு பெர்லின் நகரில்உள்ள ஒலிம்பியா ஸ்டேடியத்தில் இறுதி மோதல் நடைபெறுகிறது.
உலகம் முழுவதும் 30 கோடி பேர் இந்தப் போட்டியை தொலைக்காட்சிகள் மூலம்பார்த்து ரசிப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
காலிறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் பிரேசிலையும், அரை இறுதிப் போட்டியில்போர்ச்சுகலையும் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது பிரான்ஸ்.
அதேபோல, காலிறுதியில் உக்ரனையும், அரை இறுதியில் வலுவான ஜெர்மனியையும்தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது இத்தாலி.
இத்தாலியும், பிரான்ஸும் சம பலம் பொருந்திய பலம் மிக்க அணிகள் என்பதால்இறுதிப் போட்டியில் அணல் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
![]() |
உலகக் கோப்பைப் போட்டிகளில் இரு அணிகளும் மொத்தம் 4 போட்டிகளில்மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்று சம பலத்துடன்உள்ளன.
பிரான்ஸ் அணியின் கேப்டன் ஜினடின் ஜிடேனுக்கு இது கடைசி கால்பந்துப் போட்டி.இத்துடன் அவர் கால்பந்துப் போட்டிகளிலிருந்து விடைபெறத் திட்டமிட்டுள்ளார்.இதனால் எப்பாடுபட்டாவது கோப்பையை வெல்லும் கனவில் உள்ளார் ஜிடேன்.
கடந்த 1998ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் பிரான்ஸ் கோப்பையைவெல்ல ஜிடேன்தான் முக்கியக் காரணமாக இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.அப்போட்டியில் பிரான்ஸிடம் வீழ்ந்தது, கால்பந்து ஜாம்பவான் பிரேசில்.
பிரான்ஸ் அணியில் ஜிடேன் தவிர, விவியன் துரம், ஹென்றி தியரி, கோல் கீப்பர்பார்த்தாஸ் ஆகியோர் அணியின் மிகப் பெரிய பலமாக உள்ளனர். இவர்கள் தவிரவியராவும் வலுவான ஒரு வீரர்.
இதுவரை 12 உலகக் கோப்பைக் போட்டிகளில் கலந்து கொண்டுள்ள பிரான்ஸ், ஒருமுறை மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இப்போது அதற்கு 2வதுவாய்ப்பு கிடைத்துள்ளது. இதை சரியாக பயன்படுத்தி கோப்பையைப் பெற பிரான்ஸ்முனைப்பாக உள்ளது.
![]() |
இது அந்த நாட்டு அணிக்கு 16வது உலகக் கோப்பைப் போட்டியாகும். இதுவரை 3முறை (1934,1938, 1982) சாம்பியன் ஆகியுள்ளது.
நான்காவது முறையாக வாய்ப்பு கிடைத்திருப்பதால் இத்தாலி வீரர்கள்புத்துணர்ச்சியுடன் காணப்படுகின்றனர். தடுப்பாட்டத்தில் இத்தாலி வீரர்கள் கில்லாடி.இந்த அணி இதுவரை நடந்த ஆட்டங்களில் ஒரு போட்டியில் கூட கோல்வாங்கவில்லை.
அமெரிக்காவுடன் நடந்த போட்டியில் மட்டுமே சேம் சைடு கோல் விழுந்தது.கோல்கீப்பர் லூகி பூப்பான் பந்து தன்னைக் கடந்து விடாமல் லாவகமாக மடக்குவதில்கில்லாடி. கேப்டன் கன்னவாரோ, டோடி, லூகா சம்ப்ராட்டா, டெல் பியரோ எனஅருமையான ஆட்டக்கார்கள் பிரான்ஸுக்கு பெரும் சவலாக இருப்பார்கள்.
அனுபவம் வாய்ந்த வீரர்கள் இரு அணியிலும் இருப்பதால், இறுதிப் போட்டி படுசுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் ரசிகர்களிடையே இப்போட்டி பெரும்எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
![]() |
ஸ்டட்கார்ட் நகரில் 3வது இடத்திற்கான போட்டி நடந்தது. இதில் போர்ச்சுகலை சந்தித்தஜெர்மனி அபாரமாக ஆடி 3 கோல்கள் போட்டு போர்ச்சுகலை திணறடித்தது.
பாஸ்டியன் ஸ்வென்ய்டீஜர் அடுத்தடுத்து 2 கோல்கள் போட்டு ஜெர்மனியைவலுப்படுததினார். 3வது கோலை அவர் அடிக்க முயன்றபோது போர்ச்சுகல் வீரர்பெடிட் தடுக்க முயன்றார். ஆனால் பந்து அவரது தலையில் பட்டு சேம் சைடுகோலாகியது.
போர்ச்சுகல் தரப்பில் நினோ கோமஸ் ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஒரு கோல்போட்டார். ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் மேலும் கோல் ஏதும்போடவில்லை.
இந்த வெற்றியின் மூலம் 3வது இடத்தைப் பிடித்தது ஜெர்மனி. இந்த அணி இதுவரை3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முறைஅதிர்ஷடம் அதன் பக்கம் இல்லாததால், 3வது இடத்தையே பெற முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?
















Click it and Unblock the Notifications