வீட்டுக்குள் தண்ணீரை செலுத்தி பூசாரி குடும்பத்தைக் கொல்ல முயற்சி!
கோவை:
வீட்டுக்குள் தண்ணீரை செலுத்தி, மின்சார ஷாக் அடிக்க வைத்து பூசாரிகுடும்பத்தினரை கொலை செய்ய நடந்த ஹை-டெக் கொலை முயற்சிமுறியடிக்கப்பட்டது. பூசாரி குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாம்மாள். இவரதுவீட்டில் மோகன் என்ற கோவில் பூசாரி வாடகைக்குக் குடியிருக்கிறார். அவருடன்மனைவி பங்கஜம் வசித்து வருகிறார்.கமலம்மாளுக்கும், அந்தப் பகுதியைச் சேர்ந்த கணேசபாண்டியன், சிவக்குமார்ஆகியோருக்கும் இடையே முன் தகராறு இருந்து வந்தது. இதில் பாண்டியனும்,சிவக்குமாரும் சகோதரர்கள். நிலத்தகராறு தொடர்பாக இருவரும் கமலம்மாளுடன்பகை கொண்டிருந்தனர்.
மோகன் குடியிருக்கும் வீட்டுக்கு அடுத்த வீட்டில்தான் சிவக்குமாரும்,கணேசபாண்டியனும் வசிக்கிறார்கள். கமலம்மாள் மீது கொண்ட பகை காரணமாக,பூசாரி மோகனை வீட்டை விட்டுக் காலி செய்ய அவர்கள் திட்டமிட்டனர்.
பலமுறை மோகனை தனியாக கூப்பிட்டு வீட்டை காலி செய்து விடு. இல்லாவிட்டால்நடப்பதே வேறு என்று மிரட்டியுள்ளனர்.
ஆனாலும் மோகன் வீட்டைக் காலி செய்யாமல் தொடர்ந்து வசித்து வந்தார். இதனால்ஆத்திரமடைந்த கணேசபாண்டியனும், சிவக்குமாரும், நூதன வழியைக்கையாண்டனர்.
பூசாரி மோகன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய போது அவரதுவீட்டுக்குள் அரை அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விசாரித்தபோது சிவக்குமாரும், கணேசபாண்டியனும்தான் இதற்குக்காரணம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை மோகன் கடுமையாககண்டித்துள்ளார். அத்தோடு அப்பிரச்சினை முடிந்தது.
இந் நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மோகன், மனைவி பங்கஜம், மகள் பத்மா,பேத்தி பவித்ரா ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். பவித்ரா மட்டும்தரையில் படுத்துத் தூங்கினாள். மற்றவர்கள் கட்டிலில் தூங்கினர்.
இந்த நிலையில் நள்ளிரவில் பவித்ரா எழுந்து அழுதுள்ளாள். சப்தம் கேட்ட மோகன்எழுந்து பார்த்தபோது வீடு முழுவதும் தண்ணீர் இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். மின்விளக்குகளைப் போடாமல் அப்படியே அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்துசத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை எழுப்பினர்.
உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீஸார் விரைந்து வந்தனர். ஏற்கனவே ஒருமுறை இதுபோல கணேசபாண்டியனும்,சிவக்குமாரும் செய்திருப்பதாக போலீஸாரிடம் மோகன் புகார் கூறினார்.
இதைத் தொடர்ந்து போலீஸார் இரு சகோதரர்களையும் விசாரித்தபோது அவர்கள்தான்சமையல் அறை குழாயை உடைத்து தண்ணீரை உள்ளே செலுத்தியது தெரிய வந்தது.
தரையில் இருக்கும் டேபிள் பேனில் மின்சாரம் பாய்ந்து மோகன் குடும்பத்தினர்சாகட்டும் என்ற திட்டத்தில் தண்ணீரை திறந்து விட்டதாகவும் கூறினர்.
இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் கோவையில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications