விவசாயிகள் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம் கருணாநிதிக்கு ஜெ அட்வைஸ்
சென்னை:
2 கோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய வகையில் எனது ஆட்சியில்கொண்டு வரப்பட்ட உழவர் பாதுகாப்புத் திட்டத்தை ரத்து செய்து விவசாயிகளின்வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதிக்கு, முன்னாள்முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அற்புதமான திட்டம்தான் உழவர்பாதுகாப்புத் திட்டம். கருவறையிலிருந்து அந்திமக் காலம் வரை விவசாயிகளுக்குநலன் பயக்கும் திட்டம் இது. இப்படிப்பட்ட ஒரு திட்டம் வேறு எந்த மாநிலத்திலும்இல்லை.
விவசாய தொழிலாளர்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் அறிவித்த திட்டத்தில், 7.32லட்சம் பேர் மட்டுமே பதிவு செய்திருந்தனர். ஆனால் அனைத்து விவசாயிகளும்பலன் அடையும் வகையில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தை எனது ஆட்சியின்போதுஅறிவித்தேன்.
2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 1.99 கோடி பேர்பதிவு செய்யப்பட்டனர். 18 வயது முதல் 65 வயது வரையிலான விவசாயத்தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள், ஆண், பெண் பாகுபாடின்றி உறுப்பினராகசேரலாம். இதில் சேர உறுப்பினர்கள் செலுத்த வேண்டிய ரூ. 10 கட்டணத்தையும் கூடஅரசே செலுத்தும் என அறிவித்தேன்.
இந்தத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களாக உள்ளவர்கள் விபத்தில் இறந்தால் அவர்களதுகுடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் வழங்கப்படும். இயற்கையாக மரணம் அடைந்தால் ரூ.10,000 இழப்பீடு, ஈமச் சடங்குக்கு ரூ. 2,500 உதவி,
உறுப்பினர்களின் பிள்ளைகள் கல்வி கற்க, 10ம் வகுப்பு முதல் தொழிற்படிப்பு வரைபடிக்க ரூ. 1,000 முதல் 6,500 வரை கல்வி உதவித் தொகை, திருமணம் செய்தால்திருமண உதவித் தொகை,
தாய்மார்களின் பிள்ளைப் பேறுக்கு ரூ. 2,000 உதவி, உறுப்பினர்கள் 60 வயதைக்கடந்து, வேலை செய்ய முடியாமல் போனால் மாதம் ரூ. 200 ஓய்வூதியம் என பெரும்பலன்களையும் அறிவித்திருந்தோம்.
தேர்தலுக்கு முன்பு இத்திட்டத்தின் கீழ் சேர்ந்திருந்த 66,49,895 பேருக்கு உறுப்பினர்அடையாள அட்டைகளை வழங்கியிருந்தோம். இத்திட்டத்திற்காக ரூ. 500 கோடிமுதல் ரூ. 600 கோடி வரை ஒதுக்கத் திட்டமிட்டிருந்தோம்.
ஆரம்பக் கட்டத்தில் திட்டம் இருந்ததால் கடந்த பட்ஜெட்டின்போது ரூ. 201.56 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் சிறுபான்மை திமுக அரசு வந்ததும் இத்திட்டம்கைவிடப்பட்டு விட்டது.
கருணாநிதியின் உள்நோக்கத்தை மக்களுக்கும், விவசாயிகளுக்கும்தெரியப்படுத்தவே இந்த அறிக்கையை வெளியிட நேர்ந்தது.
கருணாநிதி வார்த்தை விளையாட்டில் ஈடுபட்டு இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதுகுறித்து விளக்கம் அளிக்கிறார். அவர் வார்த்தையோடு விளையாடட்டும், ஆனால்விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாட வேண்டாம்.
எனது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இலவச பாடல் நூல் திட்டம், இலவச சைக்கிள்திட்டம் ஆகியவற்றை தொடரும்போது விவசாயிகள் மட்டும் என்ன பாவம்செய்தார்கள்? எனவே உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்யும் முடிவை திமுக அரசுகைவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
அதிமுகவில் நெல்லை கண்ணன் ஐக்கியம்:
முன்னதாக நெல்லை கண்ணன் இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
காங்கிரசில் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதாவை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார் கண்ணன். இதையடுத்து அவருக்கு கவனிப்புகிடைத்தது. ஒரு காரும், உதவியாளரும் தரப்பட்டு அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய பணிக்கப்பட்டார்.
இந் நிலையில் இன்று போயஸ் கார்டனுக்கு சென்ற கண்ணன், அதிமுகவில் சேர்ந்தார். மேலும் பல்வேறுகட்சியினரையும் அதிமுகவினர் அழைத்து வந்து ஜெயலலிதா முன்னிலையில் கட்சியில் சேர்த்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications