தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வன்முறை!
சென்னை:
சென்னையில் நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் தேர்தல்வாக்குப்பதிவின்போது பெரும் வன்முறை ஏற்பட்டது. வாக்குச் சீட்டுக்கள் தீ வைத்துஎரிக்கப்பட்டன.
தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ராம.நாராயணன் ஏற்கனவே போட்டியின்று தேர்வுசெய்யப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஞாயிற்றுக்கிழமை தேர்தல்நடந்தது.பிரச்சினை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் ஏராளமான போலீஸார்பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
நடிகர் கமல்ஹாசன், விஜயகாந்த், ராதிகா உள்ளிட்ட உறுப்பினர்கள் தேர்தலில்வாக்களித்தனர்.
மாலையில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. பொருளாளர் பதவிக்குப்போட்டியிட்ட அழகன் தமிழ் மணி வெற்றி பெற்றதாகவும், துணைத் தலைவர்பதவிக்கு ஏ.எம்.ரத்னம், வி.சேகர் ஆகியோர் வெற்றி பெற்றதாகவும்அறிவிக்கப்பட்டது.
செயலாளர் பதவிகளுக்கு கமீலா நாசர் மற்றும் கேயார் ஆகியோர் வெற்றி பெற்றதாகஅறிவிக்கப்பட்டது. இந்த முடிவுகளுக்கு அன்பாலயா பிரபாகரன், கே.ராஜன்ஆகியோரது ஆதரவாளர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
இவர்கள் தலைவர் ராம.நாராயணனின் அணியைச் சேர்ந்தவர்கள். தேர்தல் முடிவுகளைஏற்க முடியாது, கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர் என்று கூறி கே.ராஜன் கோஷ்டி கடும்எதிர்ப்பு தெரிவித்தது.
மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர். இது பின்னர் கலவரமாகமாறியது. ராஜன் ஆதரவு தயாரிப்பாளர்கள் சிலர், வாக்குப் பெட்டிகளை எடுத்து வந்துவாக்குச் சீட்டுக்களுக்கு தீவைத்து எரித்தனர்.
இதனால் திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அடிதடியாக இது மாறுவதற்குள் போலீஸார் தலையிட்டு கலவரத்தில்ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.
இந்தத் திடீர் திருப்பத்தால், தேர்தலை ரத்து செய்வது குறித்து சங்கத் தலைவர் ராம.நாராயணன் தலைமையில் தயாரிப்பாளர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications