தமிழகத்திலும் மேலும் ஒரு ஐஐடி: தயாநிதி
வேலூர்:
தமிழகத்தில் மேலும் ஒரு ஐ.ஐ.டியை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகமத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
வேலூர் ஊரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு தயாநிதி மாறன்பேசுகையில், நாட்டில் உள்ள ஐ.ஐ.டி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.அப்படி அதிகரிக்கப்படும் போது தமிழகத்திற்கு இன்னொரு ஐ.ஐ.டி. (தற்போதுசென்னையில் மட்டும் உள்ளது) கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
வேலூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (டைடல் பூங்கா)அமைக்கப்படும். இதுகுறித்து ஏற்கனவே உறுதி அளித்துள்ளேன்.
ஆனால் இந்த மாவட்ட அமைச்சர் துரைமுருகன், தொகுதி எம்.எல்.ஏக்கள்ஞானசேகரன், காந்தி ஆகியோர் அவரவர் பகுதியில் இதை அமைக்க வேண்டும் என்றுகூறி வருகிறார்கள்.
மூன்று பேரும் கலந்து பேசி நல்ல முடிவாக அறிவித்தால், விரைவிலேயே இங்குடைடல் பூங்காவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தயாநிதி மாறன்.
முன்னதாக தமிழக கத்தோலிக்க இளைஞர் இயக்கத்தின் 3வது மாநில மாநாட்டில் பேசிய மாறன்,
2004 பாராளுமன்ற தேர்தலில் தெளிவான தீர்ப்பு அளித்ததால் மன்மோகன் சிங் தலைமையில் மத்திய அரசுசிறப்பாக நடக்கிறது. எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை கருணாநிதி தந்தார்.
தகவல் தொழிநுட்ப துறைக்கு இந்தியர்கள் செய்து வரும் சேவையால் எனக்கு உலகளவில் மரியாதை கிடைத்துவருகிறது. ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்ற துவங்கிவிட்டார் கருணாநிதி.
ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எங்காவது ஒரு புதிய சாலை, தொழிற்சாலை, பாலம்,பள்ளிக்கூடம், கல்லூரி வந்தது உண்டா? மதமாற்ற தடை சட்டம், ஆடு வெட்ட தடை தானே வந்தது. இதொல்லாம்முக்கியமா?
பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து வருகின்றன. கடந்த 5 ஆண்டில் தகவல்தொழில்நுட்பத்துறையில் அதீத வளர்ச்சியால் பெங்களூர் ஸ்தம்பித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திதமிழகத்தை நோக்கி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை வர வைத்திருக்கலாம்.
அந்த வாய்ப்பை ஜெயலலிதா அரசு தவறவிட்டு விட்டது. மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலியில் டைடல்பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு இருக்கும் இடத்திலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க முயற்சித்துவருகிறோம்.
உள் கட்டமைப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளோம். தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்வரவுள்ளது. உங்களுக்காக உழைக்க பயனுள்ள திட்டங்களை வழங்க உள்ளாட்சி தேர்தலில் ஒத்துழைக்கவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications