அமெரிக்க இந்தியர்கள் கடும் உழைப்பாளிகள்-ரைஸ்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்க வாழ் இந்தியர்கள் மிகக் கடுமையாக உழைப்பதாகவும், அமெரிக்காவுக்குபெருமை தேடித் தருவதாகவும் அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்காண்டலீஸ்ஸா ரைஸ் கூறியுள்ளார்.

இந்திய டாக்டர்கள் சங்கம் மற்றும் ஆசிய அமெரிக்க ஹோட்டல் உரிமையாளர்கள்சங்கம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரைஸ் பேசுகையில்,

இந்தியர்களின் கடும் உழைப்பின மூலம் அமெரிக்காவின் பொருளாதாரம் மட்டும்உயரவில்லை. மாறாக அமெரிக்காவின் பெயரும், கெளரவம் கூட உயர்ந்துள்ளது.

அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மிகத் தரமான வாழ்க்கையை வாழ்கின்றனர். சட்டத்தைமதிப்பதிலும் சிறந்து விளங்குகிறார்கள். தங்களது வெற்றியை, தங்களை விட தாழ்ந்தநிலையில் இருப்பவர்களுடனும் பகிர்ந்து கொண்டு அவர்களையும் உயர்த்தமுயற்சிக்கிறார்கள்.

தங்களை அமெரிக்கர்களாகவே கருதி வாழ்ந்து நாட்டை மேலும் பொலிவாக்கிவருகின்றனர்.

இங்கே வந்திருக்கும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவுக்கு முதல்முறையாக வந்தபோது மாணவர்களாகத்தான் இருந்திருப்பீர்கள். இங்கு கல்வி அறிவுபெற்ற நீங்கள், உங்களது சமுதாயத்தையும், குடும்பத்தையும் உயர்த்த இங்கேயேதங்கி விட முடிவு செய்திருப்பீர்கள்.

ஒரு முன்னாள் கல்லூரிப் பேராசிரியை என்ற முறையில், இந்திய மாணவர்களை நான்நன்கு அறிவேன்.

கனவுகளோடு வருபவர்களுக்கு அமெரிக்காவின் கதவுகள் திறந்தே இருக்கும்.நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது அதிக அளவிலானஇந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ஆண்டு மட்டும் 80,000 பேர் இங்கு பயின்று வருகிறார்கள்.

அதேபோல டெல்லி, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கானஅமெரிக்கர்கள் வசித்து வருகிறார்கள்.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழும் இந்தியாவும், அமெரிக்காவும் நட்புபாராட்டுவதில் ஆச்சரியமே இல்லை. இது இயல்பானது.

இந்தியா சுதந்திரமான, வெளிப்படையான, நிலையான, பல இனங்களைக் கொண்ட,பல மதங்களைக் கொண்ட பரந்து விரிந்த ஒரு ஜனநாயக நாடு. தனி நபர்சுதந்திரத்திற்கு அங்கு பெரும் மதிப்பு உள்ளது. சட்டப்பூர்வமாகவும்,அரசியல்ரீதியாகவும் அங்கு ஜனநாயகம் சிறந்த முறையில் தழைத்தோங்கியுள்ளது.

விரைவில் அதிக ஜனத்தொகை கொண்ட மிகப் பெரிய நாடாக இந்தியா மாறவுள்ளது.அத்தோடு உலகின் ஐந்து முன்னணி பணக்கார நாடுகளில் ஒன்றாகவும் இந்தியாஉருவாகவுள்ளது.

வல்லரசு நாடாகாவும் இந்தியா மாறவுள்ளது. வேகமாக மாறி வரும் ஆசியாவில்,அமெரிக்காவின் நிலையான, ஸ்திரமான நண்பனாக இந்தியா இருக்கும்.

21ம் நூற்றாண்டில் சவால்களை இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்தே சந்திக்கும்.இந்திய, அமெரிக்க வர்த்தக உறவை பலப்படுத்த தேவையான நிதியை அமெரிக்கஅரசு முதலீடு செய்துள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு இரு நாடுகளுக்கும் இடையே மிக நெருக்கமான நட்புநிலவி வருகிறது. இந்த நட்பு உலகின் முகத்தையே மாற்றக் கூடிய சக்தி படைத்தது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஏற்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கநாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும்.

கடந்த மாதம் நடந்த செனட் கூட்டத்தில் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சபையும் இதை அங்கீகரித்து சட்ட மசோதாவிற்குஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்திய அமெரிக்க உறவை விரிவுபடுத்தவும், வலுப்படுத்தவும், அதிபர் ஜார்ஜ் புஷ்எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பலம் சேர்க்க காங்கிரஸ் உதவ வேண்டும்.

அதிபர் புஷ், இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை தனது வெளியுறவுக்கொள்கைகளில் மிகவும் முக்கியமானதாக கருதுகிறார் என்றார் ரைஸ்.

இந்தியாவையும், இந்தியர்களையும் வெகுவாகப் பாராட்டி ரைஸ் பேசியதைகூடியிருந்த இந்தியர்கள் பலத்த கரகோஷம் செய்து வரவேற்றனர்.

இந்தியா- வடகொரியா:

இந்தியாவின் அக்னி-3 ஏவுகணை சோதனைக்கும், வட கொரியாவின் ஏவுகணைசோதனைக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளதாகவும் இந்தியாவின் ஏவுகணைசோதனை யாரையும் அச்சுறுத்தவில்லை என்றும் அமெரிக்கா கருத்துதெரிவித்துள்ளது.

ஜூலை 4ம் தேதி வட கொரியா சரமாரியாக ஏவுகனைகளை ஏவி சோதனைநடத்தியது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம்தெரிவித்துள்ளன. தன்னை பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைஎடுக்கத் தயங்க மாட்டோம் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இந் நிலையில் இந்தியா கடந்த 9ம் தேதி நடத்திய அக்னி-3 ஏவுகணை சோதனைநடத்தியது.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டோனி ஸ்னோவின்நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, வட கொரியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேநிறைய வித்தியாசம் உண்டு.

அண்டை நாடுகளை பயமுறுத்தும் வகையிலோ, மிரட்டும் வகையிலோ இந்தியாதனது ஏவுகனையை சோதித்துப் பார்க்கவில்லை. தனது சுய பாதுகாப்பை மட்டுமேமனதில் கொண்டு அக்னி-3 ஏவுகனை பரிசோதித்துப் பார்த்துள்ளது.

மேலும் அக்னி சோதனை குறித்து முன்கூட்டியே அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்குஇந்தியா தகவல் தந்துவிட்டது. இந்த விஷயத்தில் இந்தியா மிக வெளிப்படையாகநடந்து கொண்டது. யாரையும் மிரட்டும் போக்கில் அவர்களது ஏவுகனை சோதனைஇல்லை.

அதேசமயம், இந்தியாவுக்கு நேர் மாறாக வட கொரியாவின் செயல் உள்ளது.அண்டை நாடுகளின் எதிர்ப்பு, உலக சமுதாயத்தின் கண்டனம் ஆகியவற்றை மீறும்வகையில் ஏவுகணை சோதனையை வட கொரியா மேற்கொண்டது. மேலும் போரைத்தூண்டும் வகையிலும் அது அமைந்துள்ளது.

இந்தியாவின் சோதனை வழக்கமானது. அது எங்களுக்கு ஆச்சரியத்தையோ,அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. இவ்வாறு சோதனை செய்ய அவர்களுக்குஉரிமை உண்டு.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவையும், சர்வாதிகார ஆட்சிநடக்கும் வட கொரியாவையும் முதலில் ஒப்பிடுவதையே அமெரிக்கா தவறாகக்கருதுகிறது என்றார் ஸ்னோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+