இன்னொரு கள்ளக் காதல்: கணவருக்கு விஷம்கொடுத்த பாசக்கார மனைவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு விஷம் கொடுத்து விட்டு கள்ளக்காதலுடன் தப்பி ஓடி விட்டார் பாசக்கார மனைவி.

வேலூரைச் சேர்ந்தவர் தயாளன். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு 4மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. ஆனால் அதற்குள்ளாக இருவருக்கும்இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

கணவர் மீது வெறுப்படைந்த பூர்ணிமாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்ஒருவருடன் கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தயாளன்-பூர்ணிமா மோதல்முற்றியது.

கள்ளக் காதலரால் சந்தோஷப்பட்ட பூர்ணிமாவுக்கு, தயாளன் கசதந்து போனார். இந்நிலையில் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருக்கும் தயாளனைத் தீர்த்துக் கட்டத்திட்டம் போட்டார் பூர்ணிமா.

அவர் தினமும் டானிக்கில் விஷத்தை கலந்துள்ளார். கடந்த 8ம் தேதி அதைகணவருக்குக் கொடுத்துள்ளார்.

அதை உண்ட தயாளன் மயங்கி விழுந்தார். அதன் பின்னர் அங்கிருந்து பூர்ணிமாஎஸ்கேப் ஆகி விட்டார். அக்கம் பக்கத்தினர் தயாளனை போரூர் ராமச்சந்திராமருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிர் பிழைத்தார்.

தனது மனைவிதான் விஷம் கலந்த டானிக்கை கொடுத்து விட்டதாக தயாளன்வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதற்கிடையே தலைமறைவாகி விட்ட பூர்ணிமா, கள்ளக் காதலுடன் போயிருக்கலாம்என போலீஸார் கருதுகிறார்கள். இருவரையும் பிடிக்க வலை வீசப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+