கணவருக்கு விஷம் தரவில்லை: மனைவி மறுப்பு
சென்னை:
கணவருக்கு விஷம் தந்துவிட்டு கள்ளக் காதலனுடன் ஓடியதாக வெளியான செய்தியை மனைவி மறுத்துள்ளார்.கணவருக்கு குடியை மறக்கடிக்கும் மருந்தைத் தான் கொடுத்தேன். விஷம் கொடுக்கவில்லை என்று அவர்கூறியுள்ளார்.
போரூரைச் சேர்ந்த தயாளன் (31), பூர்ணிமாவுக்கு (21) நான்கு மாதங்களுக்கு முன்று திருமணம் நடந்தது.திருமணத்துக்குப் பிறகு பூர்ணிமாவை வேலூரைச் சேர்ந்த ஒரு வாலிபர் அடிக்கடி சந்தித்து வந்ததாகத் தெரிகிறது.இந் நிலையில் கடந்த 9ம் தேதி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தயாளன் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.அவரை பரிசோதித்த டாக்டர்கள், தயாளன் குடித்த டானிக்கில் விஷம் கலத்திருந்ததை கண்டுபிடித்து கூறினர்.வேலூர் வாலிபருடன் பூர்ணிமாவுக்கு தொடர்பு இருந்ததாகவும், அதை கண்டித்ததால் தனக்கு டானிக்கில் விஷம்கொடுத்து கொல்ல முயன்றதாகவும் பூர்ணிமா மீது புகார் கூறினார் தயாளன்.
இந் நிலையில் பூர்ணிமா காணாமல் போனார். இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது.பூர்ணிமா, தன் தாய் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் இன்று காலைஅணைக்கட்டுக்கு கிராமத்துக்குக் சென்றனர்.
பூர்ணிமாவை விசாரணைக்கு அழைத்துச் செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்புஏற்பட்டது. இதையடுத்து வேலூர் மாவட்ட போலீஸ் உதவியுடன் பூர்ணிமாவை போலீசார் சென்னைக்குஅழைத்து வந்தனர்.
அவரிடம் விசாரித்த போது பல புதிய தகவல்கள் வெளியாயின. அவர் போலீசிடம் கூறியதாவது,
எங்களுக்கு கடந்த மார்ச் 24ம் தேதி திருமணம் நடந்தது. முதலிரவுக்கே குடித்து விட்டுதான் வந்தார். இதனால்நான் அவரை நெருக்க விடவில்லை. இதைத் தொடர்ந்து அவருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனால்தினமும் குடித்து விட்டு வந்து வலுக்கட்டாயமாக உறவு கொள்வார். இதை நான் ஏற்கனவே என் பெற்றோரிடம்சொல்லியிருக்கிறேன். அவர்கள் அனுப்பி வைத்த எங்கள் குடும்ப நண்பருடன் என்னை தொடர்புபடுத்திபேசினார்.
இதற்கிடையில் குடியை மறக்கடிக்கச் செய்வதற்காக குன்றத்தூர் சென்று மருந்து வாங்கி வந்து சாப்பாட்டில்காலந்து கொடுத்தேன். கடந்த வாரம் விட்டுக்கு மது பாட்டிலுடன் வந்த என் கணவரிடம் சண்டை போட்டேன்.
அப்போது, குடும்ப நண்பருடன் ஓடி போகப் போகிறாயா? என்று அசிங்கமாகப் பேசினார். இதனை நான் எனதுபெற்றோருக்கு தெரியப்படுத்தினேன். மேலும் என்னை அழைத்து செல்லுமாறும் கூறினேன். இதற்கிடையே 8ம்தேதி என் கணவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரது தம்பி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார்.
மறுநாள் காலை என் பெற்றோர் வந்து என்னை வேலூருக்கு அழைத்து சென்றுவிட்டனர். ஆனால், நான் விஷம்தந்ததாக பொய்யான தகவலைக் கூறி என் பெயரை பத்திரிக்கைகளில் அசிங்கப்படுத்திவிட்டார் என் கணவர்என்றார் பூர்ணிமா.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications