சுஷ்மா-தாவூத் தொடர்பு: விசாரணை நடத்த கோரும் குரானா!
டெல்லி:
தாதா தாவூத் இப்ராகிமுக்கும், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜுக்கும் இடையேநெருங்கிய தொடர்பு இருப்பதாக பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவர்மதன்லால் குரானா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.
![]() |
அந்தக் கடிதத்தில், கடந்த 1998ம் ஆண்டு ரமேஷ் சர்மா என்பவரை சிபிஐ அதிகாரிகள்விசாரித்தனர். அப்போது அவர் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.
தாவூத் இப்ராகிமின் முக்கியக் கையாளான ரமேஷ் சர்மா, தனக்கு ஏராளமானஅரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் டெல்லி பிரிவுதலைவர் வி.பாலசுப்பிரமணியம், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கும் இடையேநெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.
இந்த விசாரணையின் அடிப்படையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் டெல்லி ஜன்பாத்பகுதி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது. அதில் பல முக்கிய ஆவணங்கள்பறிமுதல் செய்யப்பட்டன.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் மும்பை தலைமை அலுவலகத்திலும் சோதனைநடத்தப்பட்டது. இந்த சோதனைகளின் தொடர்ச்சியாக பாலசுப்பிரமணியம் மீது சிபிஐவழக்கு தொடர்ந்தது. அது இன்னும் நிலுவையில் உள்ளது.
![]() |
ரமேஷ் சர்மா தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் 12 முதல் தகவல்அறிக்கைகளை பதிவு செய்ய மத்திய அரசுக்கு சிபிஐ பரிந்துரைத்தது. இதில் சுஷ்மாசுவராஜ் மீதான வழக்கும் ஒன்று.
ஆனால் அதை அப்போதைய பாஜக அரசு கிடப்பில் போட்டு விட்டது. அப்போதையஉள்துறை அமைச்சர் அத்வானியின் தலையீடு காரணமாகவே சுஷ்மா மீது வழக்குத்தொடர முடியாத நிலை இருப்பதாக டெல்லி காவல்துறை, மத்திய உள்துறைஅமைச்சகத்திற்கு மறைமுகமாக கடிதம் எழுதியது.
மேலும் ரமேஷ் சர்மாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்காக வருமானவரித்துறை துணை ஆணையர் விஸ்வ பந்து குப்தாவும் இடமாற்றம் செய்யப்பட்டார்.சுஷ்மா சுவராஜின் தூண்டுதலால்தான் தான் இடமாற்றம் செய்யப்பட்டதாக குப்தாபகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விஷயம் நாடாளுமன்றத்திலும் விவாதத்திற்கு வந்தது. அப்போது தனக்குரமேஷ் சர்மாவைத் தெரியவே தெரியாது என்றார் சுஷ்மா. இந்த விவகாரம் தொடர்பாகவெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அப்போதைய பிரதமர் வாஜ்பாயும்,அத்வானியும் பல முறை தெரிவித்தனர்.
ஆனால் அப்படி ஒரு அறிக்கை கடைசி வரையிலும் வெளியாகவில்லை.
![]() |
இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம்தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.ஆனால் அப்படிச் செய்யாமல் சுஷ்மாவைக் காப்பாற்ற அத்வானி முயற்சித்துள்ளார்.இது மிகப் பெரிய குற்றமாகும்.
இந்த சர்ச்சை எழுந்தபோது சுஷ்மா சுவராஜ் மத்திய அமைச்சராக இருந்தார். அவரதுகட்டுப்பாட்டின் கீழ் பல முக்கிய அரசு ரகசியங்கள் இருந்தன. அவருக்கும் தாவூத்இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான ரமேஷ் சர்மாவுக்கும் நெருக்கமான தொடர்புஇருந்ததால் நாட்டின் பாதுகாப்பு குறித்த பல முக்கியத் தகவல்கள் கசிந்திருக்கக் கூடியவாய்ப்புகள் உள்ளன.
எனவே தாவூத் இப்ராகிம், ரமேஷ் சர்மா மற்றும் சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்குஇடையிலான உறவுகள், தொடர்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டியது அவசியம். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
சுஷ்மா மீது கிரிமினல் சட்டப்படி வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார் குரானா.
குரானாவின் இந்த புகார்களை மறுத்துள்ள சுஷ்மா சுவராஜ், அவர் மீது மான நஷ்ட ஈடுவழக்குப் போடப் போவதாக எச்சரித்துள்ளார்.
ஆனால் இதுகுறித்த தான் கவலைப்படப் போவதில்லை, வழக்கை சந்திப்பேன் என்றுகுரானா தெரிவித்துள்ளார்.
சுஷ்மா சுவராஜுக்கும், ரமேஷ் சர்மா, தாவூத் இப்ராகிமுக்கும் உள்ள தொடர்பு குறித்தவீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை வெளியிட்டால் சுஷ்மாவின் குட்டுஅம்பலமாகி விடும் என்றும் எச்சரித்துள்ளார் குரானா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications