ஊதினார்..அணைக்க மறந்தார்..உயிர் துறந்தார்!
சென்னை:
குடிபோதையில், படுத்துக் கொண்டே சிகரெட் பிடித்தவர், அதை அணைக்காமல்அப்படியே தூங்கிப் போனதால், படுக்கையில் தீப்பிடித்து கருகி இறந்தார்.
சென்னை பல்லவாரம் அருகே உள்ள பம்மல் பசும்பொன் நகரைச் சேர்ந்தவர்சீனிவாசன். இவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இவரது மனைவி வள்ளி.இவர்களுக்கு நரேஷ் என்ற 4 வயது மகன் உள்ளான். குடிப்பழக்கம் உள்ள சீனிவாசன்தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வருவார். இதனால் அவருக்கும், வள்ளிக்கும்இடையே தகராறு ஏற்படுமாம். குடிப்பழக்கத்தால் கடனாளியும் ஆகியிருந்தார்சீனிவாசன்.
சில நாட்களுக்கு முன்பு சீனிவாசனுக்கும், வள்ளிக்கும் தகராறு ஏற்பட்டது.கோபமடைந்த மனைவி வள்ளி தனது தாய் வீட்டுக்குக் குழந்தையுடன் சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சீனிவாசன், வேலைக்குப் போய் விட்டுஇரவு வீடு திரும்பினார். குடிபோதையில் இருந்த அவர் சிகரெட் பற்ற வைத்துஅப்படியே படுக்கையில் சாய்ந்தார்.
போதையில் இருந்த அவர் சிகரெட்டை அணைக்காமல் அப்படியே தூங்கி விட்டார்.சிறிது நேரத்தில் சிகரெட் நெருப்பு படுக்கையில் பட்டு தீப்பிடித்துக் கொண்டது.
இதில் படுக்கையுடன் எரிந்து சீனிவாசன் சாம்பலானார்.
சீனிவாசன் வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறுவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர்போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது படுக்கையில் கரிக் கட்டையாக பிணமாகிக்கிடந்தார் சீனிவாசன்.
பிணத்தை மீட்ட போலீஸார் அதை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும், குடியைக் கெடுக்கும்.
அத்தோடு சிகரெட்டும் சேர்ந்து கொண்டதால் ஒருவரது உயிரே பறிபோயுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications