எங்களுக்கு தொடர்பில்லை-சிமி: காஷ்மீரில் அல்-கொய்தா?
மும்பை:
மும்பை குண்டு வெடிப்புகளுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இந்திய இஸ்லாமிய மாணவர்இயக்கம் (சிமி) மறுப்பு தெரிவித்துள்ளது.
அந்த இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் பேசுகையில்,எதற்கெடுத்தாலும் சிமி மீது பழியைப் போட்டுவிட்டு வழக்கை திசை திருப்புகிறார்கள், அப்பாவிகளை கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டு வழக்கை மூடி விடுகிறார்கள்.
இந்த குண்டு வெடிப்பை யார் நடத்தியிருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றம் தான். தவறு செய்தவர்களை கைதுசெய்து தண்டனை தரட்டும். தேவையில்லாமல் எங்கள் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல.
ஆர்எஸ்எஸ் தூண்டுதலால் தான் சிமிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.
விமான நிலையங்களில் தீவிர சோதனை:
இதற்கிடையே நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் பயணிகளை பரிசோதிப்பது மிகவும்தீவிரமாகியுள்ளது. மேலும் விமான நிலையங்கள் முழுவதும் மிக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
பயணிகளுடன் விமான நிலையம் வருவோரின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.விமான நிலைய டெர்மினல்களில் நுழைய பயணிகள் அல்லாதோருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் உடமைகள் தீவிரமாக பரிசோதிக்கப்படுவதால் விமானங்கள் கிளம்புவது தாமதமாகியுள்ளது.பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடந்த இரு நாட்களாக விமானங்கள் தாமதமாகவே புறப்படுகின்றன.
நோபளத்தில் 2 பாக் தீவிரவாதிகள் கைது:
இதற்கிடையே நோபளத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்மாண்டுவில் கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 16 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளும்கைப்பற்றப்பட்டுள்ளன.
காஷ்மீரில் அல்-கொய்தா கிளை?:
இதற்கிடையே காஷ்மீரில் அல்-கொய்தா கிளையை பின்லேடன் தொடங்கியிருப்பதாகவும் அதற்கு அபு அப்துல்ரகுமான் என்பவனை தலைவைனாக நியமித்துள்ளதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications