குடிபோதையில் கலாட்டா- நீதிபதி கைது!
சென்னை:
சஸ்பெண்ட் செய்யப்பட்ட கோபத்தில் குடித்து விட்டு திருத்துறைப்பூண்டி நீதிமன்றவளாகத்திற்குள் புகுந்து அங்கிருந்து கண்ணாடி ஜன்னலை உடைத்து, பாதுகாப்புக்குஇருந்த காவலாளியை தாக்கிய மாஜிஸ்திரேட் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி குற்றவியல் நடுவராக பணியாற்றியவர்ராமராஜ். இவர் மீது சில ஊழல் புகார்கள் கூறப்பட்டதையடுத்து, ராமராஜை தற்காலிகபணி நீக்கம் செய்து சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.பணிநீக்கம் செய்யப்பட்ட ராமராஜ், நீதிமன்ற வளாகத்தில் உள்ள அரசுக் குடியிருப்பில்வசித்து வருகிறார். இந் நிலையில் அதிகாலை இரண்டரை மணியளவில் குடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு வந்தார் ராமராஜ்.
பின்னர் கீழே கிடந்த கற்களை எடுத்து நீதிமன்றத்தின் கண்ணாடி ஜன்னலில் எறிந்தார்.இதில் கண்ணாடி உடைந்தது.
இதைப் பார்த்த காவலாளி நாகூரான் ஓடி வந்து தடுக்க முயற்சித்தார்.
அப்போது அவரை ராமராஜ் அரிவாளைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாரிடம் புகார் தெரிவித்தார் நாகூரான்.
மாஜிஸ்திரேட்டே இவ்வாறு குடித்துவிட்டு, அரிவாளை தூக்கிக் கொண்டு தகராறுசெய்ததால் போலீசார் என்ன செய்வது என்று தெரியாமல் மேலிடத்திற்குத் தகவல்கொடுத்தனர்.
அங்கிருந்து நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு வந்ததும் வழக்குப் பதிவு செய்துராமராஜைக் கைது செய்தனர்.
மன்னார்குடி குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராமராஜை 15 நாள்சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராமராஜ் சிறையில்அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே மாஜிஸ்திரேட் ராமராஜின் செயலுக்கு திருத்துறைப்பூண்டி வக்கீல்கள்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications