அமெரிக்க தூதரகத்தை செல்போனில் படம் எடுத்தவர் கைது
சென்னை:
சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரக சுற்றுச் சுவரை செல்போனில் படம்பிடித்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா சாலையில் அமெரிக்க துணைத் தூதரகம் உள்ளது. இங்குஎப்போதும் ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.அண்ணா மேம்பாலத்தின் மேலேயும் ஒரு போலீஸ்காரர் பாதுகாப்புக்குநிறுத்தப்பட்டிருப்பார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில்ஒருவர் அமெரிக்க துணை தூதரகத்தை சாலையில் நின்றபடி செல்போனால் படம்எடுத்தார்.
இதைப் பார்த்ததும் போலீஸார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்தனர். காவல்நிலையத்திற்குக் கூட்டிப் போய் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் பெயர் ஜஹாங்கீர் என்றும், ஜாபர்கான்பேட்டையைச்சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. எம்.இ. படித்துள்ள ஜஹாங்கீர், கட்டுமானத்தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. அகஸ்டின் என்பவரது வீட்டுக்குச் சுற்றுவர் சுவர் கட்டும்பணியில் தான் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த சுவருக்கு மாடலுக்காகவே அமெரிக்கதுணைத் தூதரக சுற்றுச்சுவரை போட்டோ எடுத்தாக ஜஹாங்கீர் கூறினார்.
அவர் கூறுவது உண்மையா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.












Click it and Unblock the Notifications