விடைபெற்றது ராமேஸ்வரம் மீட்டர்கேஜ் ரயில்!
ராமேஸ்வரம்:
பாம்பன் முதல் ராமேஸ்வரம் வரையிலான மீட்டர் கேஜ் ரயில் பாதையைஅகலப்பாதையாக மாற்றும் பணி இன்று தொடங்குகிறது.
இதையடுத்து ராமேஸ்வரம் மக்களுக்கு நீண்ட காலமாக சேவையாற்றி வந்த மீட்டர்கேஜ் ரயில்கள் நேற்றுடன் பிரியா விடை பெற்றன.தென்கோடியில் கிழக்கே கடலில் அமைந்துள்ள அழகிய தீவுதான் ராமேஸ்வரம்.சரித்திரப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரத்திற்கு ஆங்கிலேயர் காலத்தில் ரயில் பாதைஅமைக்கப்பட்டது.
அந்த ரயில் பாதை மீட்டர் கேஜ் பாதையாகும். இந்தப் பாதையை அகலப் பாதையாகமாற்றி அமைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக கோரிக்கை விடப்பட்டு வந்தது.
அகலப் பாதையாக மாற்றுவதன் மூலம் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு நேரடிரயில் போக்குவரத்துக் கிடைக்கும், ராமேஸ்வரம் பொருளாதார ரீதியாகவும், சுற்றுலாரீதியாகவும் பெரும் வளர்ச்சி அடையும் என்பதால் அகலப் பாதை கோரிக்கைவலுத்தது.
இதைத் தொடர்ந்து மத்திய ரயில்வே துறை ராமேஸ்வரம் ரயில் பாதையை அகலப்பாதையாக மாற்ற முடிவெடுத்தது.
இதன்படி மதுரை ராமேஸ்வரம் இடையிலான பாதையை அகலப் பாதையாக திட்டம்தீட்டப்பட்டு பணிகள் தொடங்கின.
முதல் கட்டமாக மதுரை-மானாமதுரை இடையிலான பணி முடிவடைந்தது.இரண்டாவது கட்டமாக மானாமதுரை-மண்டபம் இடையிலான பாதை அகலப்பாதையாக மாற்றப்படவுள்ளது. அந்தப் பணி இன்று தொடங்குகிறது.
ரூ. 114 கோடி செலவில் கிட்டத்தட்ட 96.1 கிலோமீட்டர் தொலைவுக்கு அகலப் பாதைபோடப்படவுள்ளது. 9 புதிய ரயில் நிலையக் கட்டடங்கள், 141 சிறிய பாலங்கள், 7பெரிய பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.
இப்பணியையொட்டி ராமேஸ்வரத்திற்கான ரயில் போக்குவரத்து இன்றுடன்நிறுத்தப்படுகிறது. தாம்பரம்-ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ், மானாமதுரை-ராமேஸ்வரம் பாசஞ்சர் (மொத்தம் 3 ரயில்கள்) ஆகியவை இன்று முதல் ரத்துசெய்யப்படுகின்றன.
இதில் சேது எக்ஸ்பிரஸ் காரைக்குடி வரை இயக்கப்படும். அதன் பின்னர் ரத்துசெய்யயப்பட்டுள்ளது. இதேபோல மற்றொரு மார்க்கத்தில், திருச்சி முதல்ராமேஸ்வரம் இடையிலான மீட்டர் கேஜ் பாதையும் அகலப் பாதையாக மாற்றப்பட்டுவருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தற்போது புதுக்கோட்டை முதல் காரைக்குடி வரையிலான பாதைஅகலப் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications