குண்டுவெடிப்பு: ஜனாதிபதி விருது பெற்றவர் கைது!
டெல்லி:
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற ஒருவரைடெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 11ம் தேதி மும்பை ரயில்களில் வெடித்த பயங்கர குண்டுவெடிப்புச்சம்பவத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு தாங்கள்தான் காரணம்என லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் கிளை அமைப்பான லஷ்கர் இகுவாஹர் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்கள் குறித்து மும்பை போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லி,அஜீஸ் உசைன் குவாஜா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மும்பை ரயில்களில் குண்டுவைத்த தீவிரவாதிகளுக்கும், இவருக்கும் நெருங்கியதொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகிறார்கள்.
குவாஜா ஒரு கைவினைக் கலைஞர் ஆவார். கடந்த 2003ம் ஆண்டு சிறந்த கைவின்ப்பொருட்கள் தயாரிப்புக்கான குடியரசுத் தலைவரின் தேசிய விருது பெற்றவர்.குடியரசுத் தலைவரிடமிருந்து இவர் விருதைப் பெற்றுள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள ஜங்புரா என்ற இடத்தில் இவர் வசித்து வருகிறார்.தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டுகள் மற்றும் பணத்தை இவர்தான் விநியோகித்ததாகபோலீஸார் கருதுகிறார்கள். மேலும் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி முக்தார்அகமதுவுக்கு இவர் ஹவாலா மூலம் பணம் விநியோகித்ததும் தெரிய வந்துள்ளது.
இவரைக் கைது செய்த டெல்லி போலீஸார் 2 கிலோ ஆர்.டி.எக்ஸ், வெடிமருந்துமற்றும் ரூ. 49 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications