பொடா சட்டம் அவசியம் இல்லை: ப.சிதம்பரம்
சேலம்:
பொடா சட்டத்தால் மட்டும்தான் தீவிரவாதிகளை ஒடுக்க முடியும் என்று கூறுவதைஏற்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மும்பை வெடிகுண்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து பொடா சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என பாஜக தலைவர்கள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர்கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சேலம் வந்த அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கருத்துதெரிவிக்கையில், பொடா சட்டம் தேவையில்லை என்பதை உணர்ந்த பின்னர்தான்நாடாளுமன்றத்தில் அந்த சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
அச்சட்டம் அமலில் இருந்த காலத்தில்தான் நாடாளுமன்றம், காஷ்மீர் சட்டமன்றம்ஆகியவை தாக்கப்பட்டன. எனவே பொடா சட்டம் இருந்தால்தான் தீவிரவாதத்தைஒழிக்க முடியும் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
பொடா சட்டம் இல்லாமலும் தீவிரவாதிகளை ஒழிக்க முடியும்.
மும்பையில் நடந்த தாக்குதல் மக்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் நடத்தப்பட்ட ஒன்று.ஆனால் மும்பை மக்கள் இதை தகர்த்து விட்டார்கள்.
இந்தியப் பொருளாதாரத்தை இதுபோன்ற தாக்குதல்தகளால் தகர்த்து விட முடியும்என்று தீவிரவாதிகள் நினைத்தால் அது தோல்வியில்தான் முடியும். மும்பை மட்டுமேஇந்தியப் பொருளாதாரம் இல்லை.
பல்லாயிரம் இந்திய நகரங்கள், பல லட்சம் தொழிற்சாலைகள், பல கோடி விவசாயநிலங்கள் அனைத்தும் சேர்ந்ததுதான் இந்திய பொருளாதாரம். அது இமயமலையைப்போன்றது. அவ்வளவு சீக்கிரம் அதை தகர்த்து விட முடியாது.
கிலோ அரிசி 2 ரூபாய் என்ற திட்டம் தமிழக அரசு கொண்டு வந்த திட்டம். மாநிலஅரசின் நிதி ஆதாரத்தின் அடிப்படையில் திமுக கொண்டு வந்த திட்டம் இது.
தேர்தல் அறிக்கையில் இதுகுறித்துச் சொன்னார்கள். சொன்னபடிநிறைவேற்றியுள்ளனர். இதை அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டியஅவசியம் இல்லை. தேவைப்பட்டால், அந்தந்த மாநில மக்களின் தேவைகளைஉணர்ந்து அந்தந்த மாநில அரசுகளே இதுகுறித்துத் திட்டமிடும்.
என்.எல்.சி. விவகாரத்தில் பங்கு விலக்கல் முடிவை பிரதமர் நிறுத்தி வைத்துள்ளார்.இதற்கு மேல் இந்த விவகாரத்தில் நான் எதுவும் சொல்ல முடியாது.
உள்ளாட்சித் தேர்தலில் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்பு தரவேண்டும் என்று நான் காங்கிரஸ் தலைவரிடம் கோரியுள்ளேன். என்னால் முடிந்தஅளவுக்கு இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க முயலுவேன் என்றார்சிதம்பரம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications