கவுன்சிலர்களே மேயர்களை தேர்வு செய்ய அவசரச் சட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாநகராட்சி மேயர்களை கவுன்சிலர்களே தேர்வு செய்ய வகை செய்யும் அவசரச்சட்டத்தை ஆளுநர் பர்னாலா பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6நகரங்கள் மாநகராட்சிகளாக உள்ளன. இங்கு உள்ள மேயர் பதவிக்கு கடந்த தேர்தலில்மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்தனர்.

இதனால் சில குழப்பங்கள் ஏற்பட்டன. அதாவது மேயர் ஒரு கட்சியைச்சேர்ந்தவராகவும், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வேறு கட்சிகளைச்சேர்ந்தவராகவும் இருந்ததால், யார் பெரியவர் என்ற சண்டையிலேயே மாநகராட்சிகள்நேரத்தை செலவிட்டு வருகின்றன.

இதனால் மக்கள் நலப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.இந்த குழப்ப நிலைக்கு மிகப் பொருத்தமான உதாரணமாக சென்னை மாநகராட்சிஇருந்தது. இங்கு திமுகவைச் சேர்ந்த ஸ்டாலின் தான் மேயராக இருந்தார்.

ஆனால் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இதனால்கூட்டம் கூடும்போதெல்லாம் கடும் மோதலும், வாக்குவாதங்களும், உறுப்பினர்கள்வெளியேற்றம் வழக்கமாகின.

இப்படிப்பட்ட நிலை வருகிற உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்டு விடாமல் தடுக்கமேயர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் பழைய முறையைக் கொண்டு வரதமிழக அரசு திட்டமிட்டது.

இதனால் மேயரும், பெரும்பான்மையான கவுன்சிலர்களும் ஒரே கட்சியைச்சேர்ந்தவர்களாக இருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும், மோதல்கள் தவிர்க்கப்படும்,நலப் பணிகளை நிறைவேற்றுவது தடைபடாது என அரசு நினைத்தது.

இதையடுத்து தமிழக அரசின் பரிந்திரையின் பேரில், இதுதொடர்பான அவசரச்சட்டத்தை தற்போது ஆளுநர் பர்னாலா பிறப்பித்துள்ளார். இதன் மூலம் வருகிறஉள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர்களுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும்.

அதன் பின்னர் அவர்களில் ஒருவரை மேயராக கவுன்சிலர்களே வாக்களித்து தேர்வுசெய்வர். இதேபோல, தமிழகத்தில் உள்ள 561 சிறப்பு நிலை ஊராட்சிகளைபேரூராட்சிகளாக மாற்றுவதற்கும் இந்த அவசரச் சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+