இந்தியா கேட்டில் இன்றும் வெடிகுண்டு மிரட்டல்!
டெல்லி:
டெல்லி இந்தியா கேட் பகுதியில் இன்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும்பீதி ஏற்பட்டது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை வெடிகுண்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நேற்று மிரட்டல் வந்தது.இதையடுத்து அங்கு போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் இதில்வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்தியா கேட்டில் வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக மும்பை போலீஸாருக்குத் தகவல் வந்தது.
அதைத் தெரிவித்தவர், சரியாக பகல் 12 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு இந்தியாகேட்டில் வெடிக்கும் என்று தெரிவித்தார். உடனடிாயக டெல்லி போலீஸாரை, மும்பைபோலீஸார் உஷார்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து ராணுவ மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்களுடன்போலஸீார் இந்தியா கேட்டை முற்றுகையிட்டு தீவிர சோதனை நடத்தினர். இதில்வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் இந்தியா கேட்டைச் சுற்றிலும் காவல் பலப்படுத்தப்பட்டு, கண்காணிப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியின் முக்கியப் பகுதிகளிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 வது நாளாக இந்தியா கேட்டுக்கு வெடிகுண்டுமிரட்டல் வந்ததால் டெல்லி மக்களிடையே பீதி நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications