பொடா சட்டம் மீண்டும் வேண்டும்: ஜெ.
சென்னை:
பெருகி வரும் தீவிரவாதத்தை ஒழிக்க பொடா சட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதம் தனது கரங்களைவிரிக்கும் போதெல்லாம் உலகம் முழுவதும் பொறுப்புள்ள நாடுகள் தீவிரவாதத்திற்குஎதிரான சட்டங்களை இயற்றுகின்றன.ஏற்கனவே உள்ள சட்டங்களையும் பயன்படுத்துகின்றன.
ஆனால் இதற்கு மாறாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொறுப்பேற்றதுமேதீவிரவாதத்தை ஒடுக்கும் பொடா சட்டத்தை திரும்பப் பெறுவதற்கு முன்னுரிமைஅளித்தது.
கடந்த 15 ஆண்டுகளாகவே தீவிரவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.இந்தியாவின் பல பகுதிகளிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திக் கொண்டுதான்உள்ளனர். திட்டமிட்டு குறி வைத்து தாக்குகிறார்கள்.
பொடா சட்டத்தை வாபஸ் பெற்றதன் மூலம் பொதுமக்களை பாதுகாப்பற்ற நிலைக்குஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தள்ளி விட்டது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளஒருவருக்கு கருணை அடிப்படையில மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துசட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது>.
சிறையில் இருக்கும் அந்த முதல் குற்றவாளியை அவரது மனைவி சந்திக்கவும்அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவரது மனைவியை கைது செய்வதற்கான வாரண்ட் உத்தரவு இன்னும்நிலுவையில் உள்ளது.
அவர் தனது கணவரை மட்டுமல்லாமல், கோவை குண்டுவெடிப்பு வழக்கில்சம்பந்தப்பட்டுள்ள மற்ற குற்றவாளிகளையும் சந்தித்துப் பல மணி நேரம் பேசுவதற்குஅனுமதி அளித்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது.
இதனால்தான் தற்போதைய முதலமைச்சரின் நடவடிக்கைகளை கண்காணிக்கவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம்.
இந்தியாவை யாரும் மண்டியிட வைக்க முடியாது என்ற வாய் ஜால வார்த்தைகளைபேசுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.
கொடியசைத்து பாகிஸ்தானுக்கு பஸ் அனுப்புவதை நிறுத்த வேண்டும். மக்கள் மனதில்நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைதான் இப்போது தேவை. அதற்கு முதல் படியாகபொடா சட்டத்தை முதலில் கொண்டு வர வேண்டும்.
மும்பை குண்டுவெடிப்பில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்தஇரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications