தமிழ் பண்பாட்டின் அடையாளம் காமராஜர்: கருணாநிதி
சென்னை:
தமிழ் பண்பாட்டின் அடையாளச் சின்னமாக பெருந்தலைவர் காமராஜர் விளங்குகிறார்என்று முதல்வர் கருணாநிதி புகழாரம் சூட்டினார்.
காமராஜரின் பிறந்த நாள் சனிக்கிழமை தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது.இதையொட்டி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில்விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் சிறப்பு விருந்தினராக கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது,எனது அன்னை அஞ்சுகம் அம்மையார் இறந்தபோது எனக்கு முன்பாகவே எனதுவீட்டுக்கு வந்து, வாசலில் காத்திருந்து, எனது அன்னையின் உடலை வரவேற்றவர்காமராஜர்.
அன்றைக்கு அவர் முதல்வர், நான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தேன். அங்கிருந்துகொண்டு காமராஜரை வசை பாடினேன், விமர்சித்தேன்.
ஆனால் எனது அன்னையின் மறைவுச் செய்தி கிடைத்ததும் முதலில் வந்தவர்அவர்தான். இந்த பண்பாடுதான், அவர் ஆறுகளை வெட்டினார், குளங்களைவெட்டினார், அணைகளை கட்டினார், நெய்வேலிக்கு அவர்தான் காரணம்என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் அவை எல்லாவற்றையும் விட அவர் தமிழர்களுடைய பண்பாட்டைநினைவுபடுத்திக் கொண்டிருந்தார். அந்தப் பண்பாட்டின் சின்னமாக விளங்கினார்.
சட்டசபைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையைக் காட்டி இதுதான்இந்தத் தேர்தலின் கதாநாயகன் என்று சொன்னவர் (ப.சிதம்பரம்) இன்று என்பக்கத்திலே அமர்ந்திருக்கிறார். அவர் ஒரு வேண்டுகோள் வைத்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை கல்வி ஆய்வுக் கழகமாக மாற்ற வேண்டும்என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதற்கு என்ன செலவானாலும் சரி அதை நாங்கள்பார்த்துக் கொள்கிறோம்.
உங்களிடத்திலும் பெற்றுக் கொள்வோம். ஏனென்றால் இதிலே ஷேத்திர கூட்டுஇருக்கிறது, கட்சி கூட்டு மாத்திரம் அல்ல. அது மதுரை ஆனாலும், சிதம்பரம் இங்கேகுறிப்பிட்டார்களே, அவருடைய பெருடைய சிதம்பரம் ஆனாலும், இரண்டும்ஷேத்திரம்தான்.
மதுரை ஷேத்திரத்திலே கல்வி ஷேத்திரம் உருவாக வேண்டும் என்று சிதம்பரம்ஷேத்திரம் கேட்டிருக்கிறது. இதை திருவாரூர் ஷேத்திரம் ஒப்புக் கொள்கிறது என்றார்கருணாநிதி.
நிகழ்ச்சியில் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்கிருஷ்ணசாமி, மேலிடப் பார்வையாளர் வீரப்ப மொய்லி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் உள்ளிட்ட பலரும் பேசினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications