கர்நாடகத்தில் கனமழை-மேட்டூருக்கு பாயும் நீர்
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்கு அணைகள் நிரம்பிவிட்டன.இதனால் அந்த நீர் மேட்டூர் அணைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
கன மழையால் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, கிருஷ்ணராஜசாகர்ஆகிய கர்நாடக மாநில அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்பிவிட்டது. இதனால் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
கபினி அணையில் இருந்து வினாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. 2 அணைகளில் இருந்தும்வினாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் பெரும் வெள்ளம்பாய்கிறது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.
நேற்று காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 12,056 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இன்று காலைநீர்வரத்து வினாடிக்கு 17,000 கன அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 103.50 அடியாக உயர்ந்துள்ளது.அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18,000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications