சென்னை பள்ளிகளில் வெடிகுண்டு புரளி-பெரும் பீதி!
சென்னை:
சென்னையில் உள்ள இரண்டு பள்ளிகளில் இன்று வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து மாணவ, மாணவியர் பெரும்பீதியடைந்தனர்.
சென்னை அண்ணா சாலையில், கிரைஸ்ட் சர்ச் ஆங்கிலோ இந்திய பள்ளி உள்ளது.இங்கு 650 பேர் படிக்கிறார்கள். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஹாரிசன்இன்று காலை பள்ளிக்கு வந்து தனது அறையைத் திறக்கப் போனார்.அப்போது சாவி கொண்டியில் ஒரு தாள் சுற்றி வைக்கப்பட்டிருந்தது. அதில், உங்களதுபள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அதுவெடிக்கும் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து துணை ஆணையர் ராமசுப்ரமணிக்கு தகவல் கொடுத்தார். உடனடியாகராமசுப்ரமணி, ஏ.சி. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்தனர்.வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
அந்த சமயத்தில் பள்ளிக்கு மாணவ, மாணவியர் வரத் தொடங்கினர். ஆனால்அவர்களை வகுப்பறைக்குள் அனுப்பாமல் பள்ளி மைதான மரத்தடியிலேயேஆசிரியர்கள் அமர வைத்தனர். சிலர் அருகில் உள்ள பேராலயத்தில் அமரவைக்கப்பட்டனர்.
தீவிர சோதனைக்குப் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி எனத் தெரிய வந்தது.மாணவர்களில் யாரோதான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று போலீஸார்தெரிவித்தனர். இதுபோன்ற விளையாட்டில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தவிர்க்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். பின்னர் மாணவர்கள்வகுப்புக்குள் சென்றனர்.
இதேபோல ஆயிரம் விளக்கு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கும் வெடிகுண்டுமிரட்டல் வந்தது. காலையில் பள்ளி தொடங்கியதும் வாரத்தின் முதல் நாள் என்பதால்இறை வணக்கம் பாடப்பட்டது. இதற்காக மாணவர்கள் கூடியிருந்தனர். இறைவணக்கம் முடிந்ததும் மாணவ, மாணவியர் வகுப்புக்குள் சென்றனர்.
அப்போது தலைமை ஆசிரியர் அறைக்கு போன் வந்தது. அவர் அங்கு இல்லாததால்இசை ஆசிரியை ஜெயமேரி போனை எடுத்துப் பேசினார். மறுமுனையில் பேசியநபர், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. யாரையும் வகுப்புக்குள்அனுமதிக்காதீர்கள் என்று கூறி விட்டு வைத்து விட்டார்.
இதையடுத்து மற்ற ஆசிரியர், ஆசிரியைகளிடம் அவர் தகவலைத் தெரிவித்தார்.பின்னர் போலீஸுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையே வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவல் மாணவ, மாணவியரிடையே பரவியதும்அவர்கள் அலறியடித்துக் கொண்டு வகுப்பறைகளை விட்டு வெளியே ஓடினர்.
போலீஸார் விரைந்து வந்து சோதனை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் இல்லைஎன்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவர்கள் மீண்டும் வகுப்புகளுக்குள்அனுமதிக்கப்பட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications