மதிமுக ஒரு கற்கோட்டை: வைகோ
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் நிருபர்களிடம் வைகோ கூறியதாவது:
வரும் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக-மதிமுக கூட்டணி தொடரும். அந்த தேர்தலில் புதிய வியூகத்தைகையாள்வோம். சென்னையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அதிமுக அலுவலகத்துக்கு மர்ம போன்வந்தது திமுக அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது.சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போதே என் வீட்டு முன்னால் தாக்குதல்நடத்தினார்கள். அவர்கள் விட்டு சென்ற அடையாள அட்டை உள்ளிட்ட ஆதாரங்களுடன் புகார் செய்தால், என்மீது திமுக எம்.பி.க்களை வைத்து கொலை முயற்சி புகார் கொடுக்க கருணாநிதி ஏற்பாடு செய்கிறார்.
மதிமுகவினர் மீதும் அதிமுகவினர் மீதும் பொய் வழக்கு போடப்படுகிறது. பொய் வழக்கு மூலம் அச்சுறுத்திஎதிர்கட்சிகளை முடக்கி விடலாம் என்று நினைக்கிறார்கள். மதிமுக ஒரு கற்கோட்டை.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மனித சமுதாயத்தில் வாழ தகுதியற்றவர்கள். ஒரு பாவமும்அறியாத அப்பாவி மக்களை கொல்லும் கொடுஞ்செயல் அடியோடு களையப்பட வேண்டும்.
அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட போது அங்குள் அரசும், மக்களும் பதறி போனார்கள்.ஆனால் மும்பை மக்கள் இதை தைரியத்துடன் எதிர் கொண்டு மனித நேயத்துடன் சேவை செய்தது இந்தியாவுக்குபெருமை சேர்ப்பதாகும். இந்த விஷயத்தில் மத்திய அரசு மீது அத்வானி குறை கூறியதை ஏற்க முடியாது.
இலங்கை விவகாரத்தில் இந்தியா மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம்எழுதியுள்ளேன். இந்தியா-இலங்கை ராணுவ கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாமல் தடுத்தது மதிமுகதான் என்றார் வைகோ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications