மத்திய அரசை தட்டி எழுப்ப பாஜகவின் மணி அடிக்கும் போராட்டம்!
சென்னை:
தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தாமல் தூக்கத்தில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிஅரசை தட்டி எழுப்பும் விதமாக மணி அடிக்கும் போராட்டத்தை வருகிற 24ம் தேதிபாஜக நடத்துகிறது.
சென்னையில், மூத்த பாஜக தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா செய்தியாளர்களிடம்இதுகுறித்துக் கூறுகையில், தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் மத்தியஅரசு மீளாத் தூக்கத்தில் இருக்கிறது.தூங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசை தட்டி எழுப்பும் விதமாக வருகிற 24ம் தேதிதமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் காலை 11 மணி முதல் 11.30மணி வரை மணி அடித்து மத்திய அரசை எழுப்பும் போராட்டத்தை பாஜகநடத்தவுள்ளது.
பல மாநிலங்களில் விவசாயிகள் வறுமை காரணமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள். விலைவாசி ஏறிக் கொண்டிருக்கிறது. மறுபுறம் தீவிரவாதம்தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது.
இப்படிப் பல பிரச்சினைகள் நாட்டை உலுக்கி வரும் நிலையில் எதைப் பற்றியும்கவலைப்படாமல் தூக்கத்தில் இருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான மத்தியகூட்டணி அரசு.
தமிழகம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய தீவிரவாதஅமைப்புகள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்திநடவடிக்கை எடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளது.
மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னரும் கூட சிமி அமைப்பு மீது கடும்நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு அமைதியாக உள்ளது. வேலையில்லாமல்இருக்கும் இளைஞர்களை சிமி அமைப்பு தேர்ந்தெடுத்து பாகிஸ்தானுக்கும்,வங்கதேசத்திற்கும் அனுப்பி தீவிரவாதப் பயிற்சி கொடுத்து இந்தியாவில் தீவிரவாதசெயல்களில் ஈடுபடுத்துகிறது.
வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவியிருப்பவர்கள், தமிழகத்தின் கோவை,திருப்பூர் ஆகிய ஊர்களில் அதிக அளவில் பதுங்கியுள்ளனர்.
அதேபோல சிமி அமைப்புடன் தொடர்புடைய பலர் திருநெல்வேலி, ராமநாதபுரம்,தஞ்சாவூர், சென்னை ஆகிய நகரங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பெங்களூர், டெல்லி, மும்பை, வாரணாசி ஆகிய ஊர்களில் நிடந்த பயங்கர தீவிரவாதசம்பவங்களுக்கான திட்டங்கள் ஹைதராபாத் நகரில்தான் தீட்டப்பட்டுள்ளன.
இப்படி தீவிரவாதம் அதிகரித்து வருவது குறித்து கவலைப்படாமல் மத்திய அரசுமெத்தனமாக உள்ளதைக் கண்டித்தே இந்த மணி அடிக்கும் போராட்டம்நடத்தப்படவுள்ளது என்றார் தத்தாத்ரேயா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications