வாஸ்து பிடியில் கருணாநிதி: ஜெ. தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாஸ்து சாஸ்திர நிபுணர்களின் ஆலோசனைப்படி சட்டசபையில் முதல்வர்,எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இருக்கைகளை மாற்ற முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக சட்டசபை வளாகம், அதன் அமைப்பும் வரலாற்றுப் பின்னணிகொண்டதாகும். விடுதலைக்குப் பிறகு 1952ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல்நடந்தது.

அந்தக் காலத்திலிருந்து நான் முதல்வராக இருந்தது வரை தமிழக சட்டசபைக் கூட்டம்மேற்படி இடத்தில்தான் நடந்தது. தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டிய நல்ல திட்டங்கள்அனைத்தும் அங்கிருந்துதான் வெளிப்படுத்தப்பட்டது.

எத்தனையோ தலைவர்கள், உதாரணமாக காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர்அந்த சட்டசபையில்தான் உரையாற்றியுள்ளனர். தங்களது பணிகளையும்ஆற்றியுள்ளனர்.

இவ்வளவு பெருமை வாய்ந்த சட்டமன்றப் பேரவைக்கும், அதன் வளாகத்திற்கும்கருணாநிதியால் பெரும் ஊறு ஏற்பட்டிருக்கின்றது. இதுகாறும் பின்பற்றுப்பட்டு வந்தசட்டமன்ற நடைமுறையானது, முதல் அமைச்சருக்கு எதிர் வரிசையில் அவருக்கு நேர்எதிரில் தான் எதிர்க்கட்சித் தலைவர் அமர்ந்திருப்பார்.

முதலமைச்சரை ஒட்டியுள்ள இருக்கைகளில் அமைச்சர்களும், எதிர்க்கட்சித்தலைவருக்கு அருகே மற்ற கட்சித் தலைவர்களும் அமர்ந்திருப்பார்கள்.

எந்த ஒரு சூடான விவாதம், உணர்ச்சிப்பூர்வமான விவாதம், அனைத்துத் தரப்பினரின்உணர்ச்சிகளையும் எடுத்துச் சொல்லும் பாங்கினைப் பார்க்கும் விதத்தில்தான் முதல்அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரது இருக்கைகள்அமைக்கப்பட்டிருந்தன.

தற்போது முதல்வர் கருணாநிதியின் உத்தரவுக்கு இணங்க முதல்அமைச்சர் மற்றும்எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் இருக்கைகள் மற்றும் மேஜைகள் முற்றிலும்மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

காலம் காலமாக இதுவரை இருந்த தன்மையினை மாற்றி, தற்போது முதல் அமைச்சர்உட்காரும் இடம் பேரவைத் தலைவரின் வலதுபுறத்தில் அமைக்கப்பட்டிருக்கிறதுஎன்றும், அவர் அமர்ந்திருப்பதை பார்க்க முடியாத வகையில், பேரவைத் தலைவரின்இருக்கையால் மறைக்கப்பட்டு அந்த இருக்கைக்கு இடது புறத்தில் எதிர்க்கட்சித்தலைவரின் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

அதாவது, முதலமைச்சரை ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள உறுப்பினர்கள் பார்க்கஇயலாது. அதேபோல ஆளும் கட்சித் தரப்பில் எதிர்க்கட்சித் தலைவரையும், மற்றும்குறிப்பிட்ட பகுதியில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் பார்க்க இயலாது.

எனக்குக் கிடைத்த தகவலின்படி வாஸ்து சாஸ்திரத்தின் முழுப் பிடியில் கருணாநிதிஇப்போது சிக்கியிருக்கிறார். முதலமைச்சர் அறையிலும் கருணாநிதி அமர்ந்துபணியாற்றுவதில்லை. அந்த அறை அவருக்கு ராசியில்லை என்றுகூறப்பட்டதால்தான் அங்கு அவர் அமருவதில்லை.

அமைச்சரவைக் கூட்டம் இதுவரை நடந்த இடத்தைத்தான் முதல்வரின் அறையாகமாற்றியிருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் வாஸ்துதான் எனத் தெரிய வருகிறது.

அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இடம் அடியோடு மாற்றப்பட்டுள்ளதற்குவாஸ்துதான் காரணம் எனத் தெரிகிறது. சட்டமன்றப் பேரவை என்பது யாருடையதனிப்பட்ட சொத்தும் அல்ல, எந்த ஒரு கட்சிக்கும் சொந்தம் அல்ல.

அப்படி இருக்கும்போது, யாரையோ கேட்டுக் கொண்டு இவ்வகை மாற்றங்கள்நடைபெற்றுக் கொண்டு வருகின்றன என்பதை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவேண்டிய கடமை முதல்வருக்கும், சட்டப் பேரவைத் தலைவருக்கும் உண்டு.

எதிர்க்கட்சித் தலைவரை நேருக்கு நேர் பார்க்க இயலாத, தயாராக இல்லாதமுதலமைச்சரை நாடு இப்போதுதான் பார்க்கிறது. தினசரி கொலை, கொள்ளை என்றுசட்டம் ஒழுங்கு காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

ஆளுங்கட்சியினரின் அராஜகம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. எங்கேபார்த்தாலும் மணல் கொள்ளை, கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இருக்கைகள் இடமாற்றம் மட்டும் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட முடியாது.இதனால் மட்டும் மைனாரிட்டி அரசு நிலைத்து நின்று விட முடியாது என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+