சிவாஜி கணேசன் சிலை: நீடிக்கும் சிக்கல்!
சென்னை:
நடிகர் சிவாஜி கணேசன் சிலை தொடர்பாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும்பணிகளை அப்படியே நிறுத்தி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் காந்தி சிலை அருகே நடிகர் திலகம் சிவாஜிகணேசனின்சிலையை நிறுவ தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக பணிகளையும்தொடங்கியது. சிலைக்கான பீடம் நிறுவப்பட்டு அதன் மேல் சிலையும் வைக்கப்பட்டுவிட்டது.இந்த நிலையில், சுதந்திரப் போராட்ட தியாகி சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். அதில் காந்தி சிலையின் முக்கியத்துவம் குறையும் வகையில்சிவாஜி சிலையை வைக்கக் கூடாது.
வேறு இடத்தில் சிலையை வைக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். இந்தமனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி முருகேசன் ஆகியோர்தற்போது சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ள இடம் திருப்திகரமாக இல்லை.
வேறு இடத்தில் வைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கருத்துதெரிவித்தனர். இந்த நிலையில் திங்கள்கிழமை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்குவந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விடுதலை ஆஜராகி, சிலைஏற்கனவே பீடத்தின் மீது நிறுத்தப்பட்டு விட்டது.
சிலையிலிருந்து வரும் நீளமான கம்பி, பீடத்திற்குள் பொருத்தப்பட்டு விட்டது.இப்போது அதை எடுக்க முயன்றால் சிலைக்கு சேதம் ஏற்படும். இப்போதுள்ளஇடத்திலேயே சிலையை நிறுவலாம் என்பதே அரசின் கருத்து என்றார்.
சிவாஜி சமூக நல பேரவை சார்பிலும், மனுதாரர் சீனிவாசன் சார்பிலும் அவர்களதுவழக்கறிஞர்கள் வாதாடினர். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், செவ்வாய்க்கிழமைக்குவழக்கை ஒத்திவைப்பதாகவும், அதுவரை சிலை நிறுவுவது தொடர்பான எந்தவிதப்பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications