1967லிருந்து காத்திருக்கிறோம்: இளங்கோவன்
தூத்துக்குடி:
அராஜக ஆட்சி நடத்திய ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்பினோம். ஆயினும் விஷ ஜந்துகளை அடியோடு ஒழிக்கவேண்டியிருக்கிறது என மத்திய இணையமைச்சர் இளங்கோவன் கூறினார்.
சாத்தான்குளத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:காமராஜரின் பெருமை, தியாகங்களை எத்தனை நாள் தான் பேசிக்கொண்டிருப்பது. தமிழகத்தில் எப்போது காமராஜர்ஆட்சியமைப்பது என்ற காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகள் எனக்குப் புரிகிறது.
அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் இப்போது காமராஜர் ஆட்சி காண முடியாத நிலையிலுள்ளது. விரைவில்அதற்கான காலம் கனியும். தமிழகத்தில் கட்சிக்கு வளர்ச்சியூட்டியவர்கள் காமராஜர், நடிகர் சிவாஜி கணேசன் ஆகிய இருவர்தான்.
அவர்கள்தான் கட்சியை உயிரோட்டமுள்ளதாக மாற்றினர். உங்கள் உள்ளத்தில் இருப்பது தான் என் உள்ளத்திலும் உள்ளது.1967லிருந்து ஆட்சிக்காக காத்திருக்கிறோம். நம்மைப்போல எந்தக் கட்சியும் இப்படி காத்திருந்தது கிடையாது.
நமக்கு ஒருநாள் வெளிச்சம் வரும், விடிவு ஒருநாள் பிறக்கும். அப்போது நாம் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியமைப்போம்.தொண்டர்களின் தியாகத்தில்தான் காங்கிரஸ் கட்சி உயிரோடு உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில்தொடர்வோம்.
அதே நேரத்தில் நம் லட்சியங்கள், கனவுகளை மேலிடத்திடம் சொல்லி விடுவோம். ஆனால் மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாம்கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். தமிழகம் சில சங்கடங்களிலிருந்து விடுபட வேண்டும். அராஜக ஆட்சி நடத்தியவர்களைவீட்டிற்கு அனுப்பினோம். ஆயினும் விஷ ஜந்துகளை அடியோடு ஒழிக்க வேண்டியிருக்கிறது. அதுவரை பொறுத்திருப்போம்என்றார்.
இக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பேசுகையில்,
விபத்தின் காரணமாக அரசியலுக்கு வந்தவர் ஜெயலலிதா. அவரது அரசியல் அநாகரிகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.தொண்டர்கள் கடுமையாக உழைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியமைக்கமுடியும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications