அன்னதான திட்டம்: கோவில் ஊழியர்களே அனுபவிப்பதை தடுக்க வேண்டும்
காஞ்சிபுரம்:
திருக்கோவில் அன்னதானத் திட்டத்தை கோவில் ஊழியர்களே அனுபவித்து வருவதை மாற்றி அந்தத் திட்டம் மூலம் கோவிலுக்கு வரும் எல்லாபக்தர்களுக்கும் பிரசாதம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என வைணவ சமூக நீதி உரிமை மீட்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சிபுரத்தில் வைணவ சமூக நீதி உரிமை மீட்பு மாநாடு நடந்தது. வரத எதிராஜ ஜீயர் சுவாமிகள் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:இந்து சமய திருக்கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு பாஞ்சராத்ர ஆகமவைணவர்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வைணவ திருக்கோவில்களில் இறைவன் முன்பு திராவிட வேதமான திவ்ய பிரபந்தம்ஓதுவதில் பிராமணர்களை தவிர மற்றவர்களை புறக்கணிக்கின்றனர்.
இறைவனுக்கு நைவேத்யம் செய்யும் பிரசாதத்தை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம். பிராமணர்களை உட்கார வைத்தும் மற்றஜாதி பக்தர்களை நிற்க வைத்தும் வழங்குகின்றனர். இந்த அநாகரிக செயலை மாற்றி எல்லாருக்கும் சமமாக வழங்க வேண்டும் என்ற அரசு ஆணையைசெயல்படுத்த வேண்டும்.
தமிழிசையை பரப்பி வரும் வைணவ சிறுகோவில் மற்றும் பஜனை கோவில் அர்ச்சர்களுக்கு மாதச் சம்பளம் அல்லது ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.கிராமப்புற சிறு கோவில்கள் மற்றும் பஜனை கோவில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
திருக்கோவில் ஊழியர்களே அனுபவித்து வரும் இலவச அன்னதான திட்டத்தை சரிசெய்து கோவிலுக்கு வரும் எல்லா பக்தர்களுக்கும் பிரசாதம் கிடைக்கஆவன செய்ய வேண்டும் என்பது உள்பட பல தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications