தேமுதிகவில் எம்.ஜி.ஆரின் நண்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாஜி முதல்வர் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரும் அதிமுகவில் மருத்துவர்அணியை தொடங்க காரணமாக இருந்தவருமான சேலத்தைச் சேர்ந்த டாக்டர்வி.பி.ஈஸ்வரன் விஜய்காந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணைந்துள்ளார்.

அவரை வைத்து வலுவான மருத்துவர் அணியை உருவாக்க நடிகர் விஜயகாந்த்திட்டமிட்டுள்ளார்.

சேலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் வி.பி.ஈஸ்வரன். அதிமுக தொடங்கப்பட்டபோது,மருத்துவர் அணியை ஆரம்பிக்குமாறு எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை வழங்கியவர்.அந்த அணியின் முதல் தலைவராகவும் இருந்தவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர்ஜானகி அணியில் இடம் பெற்றிருந்தார் ஈஸ்வரன்.

அதன் பின்னர் ஜெ அணியும், ஜானகி அணியும் ஒருங்கிணைந்த பின்னர் ஜானகிஅணியில் இடம்பெற்றிருந்தவர்கள் ஜெயலலிதாவால் ஓரம் கட்டப்பட்டனர்.அவர்களில் ஈஸ்வரனும் ஒருவர்.

அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈஸ்வரன் ஈடுபடவில்லை. தனது மருத்துவர்தொழிலில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். இந் நிலையில் ஈஸ்வரன் குறித்துத் தெரியவந்த விஜயகாந்த், அவரை முதலில் கட்சியில் சேர்க்க முயற்சிக்குமாறு சேலம்மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி ஈஸ்வரனை சந்தித்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜூனன்தேமுதிகவில் சேர வருமாறு அழைத்தார். விஜய்காந்துடனுடன் அவரை பேசவைத்தார்.

இதைத் தொடர்ந்து ஈஸ்வரன் தற்போது தேமுதிகவில் இணைந்துள்ளார்.

திருச்சி சென்ற டாக்டர் ஈஸ்வரன், விஜயகாந்த்தை நேரில் சந்தித்து கட்சியில்இணைந்தார். அவரை சென்னைக்கு வரச் சொன்ன விஜயகாந்த், நாம் பின்னர்விரிவாகப் பேசுவோம் என்று கூறினாராம்.

தேமுதிகவில இணைந்தது குறித்து ஈஸ்வரன் கூறுகையில்,

படித்தவர்கள், படிக்காதவர்கள் என யாராக இருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான்பழகுகிறார் விஜயகாந்த். பாரபட்சம் பார்க்காத நபராக இருக்கிறார். எம்.ஜி.ஆருக்குப்பிறகு இவர்தான் மிகச் சிறந்த தலைவர்.

இப்போது உள்ள அரசியல் கட்சிகளில் டாக்டர்களுக்குப் பெரிய மரியாதை இல்லை.கூட்டங்களுக்குக் கூப்பிட்டால் கூட எந்த டாக்டரும் வர மாட்டார்கள். ஆனால்தேமுதிகவில் இணைய பல டாக்டர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட டாக்டர்களை சேர்த்த கேப்டன் முன் நிறுத்தப் போகிறேன் என்றார்ஈஸ்வரன்.

விஜயகாந்த்தின் எண்ணமும் அந்த ரீதியில்தான் இருக்கிறது. அரசியல் கட்சிகளில்இபபோது மருத்துவர் அணி என்று ஒன்று இருந்தாலும் கூட அது பெயருக்குத்தான்இருக்கிறது. அப்படி இல்லாமல் தேமுதிகவில் மருத்துவர் அணியை வலுவாகஅமைத்து, அதன் மூலம் தமிழகம் முழுவதும் இலவச மருத்துவ முகாம்களை நடத்திமக்களைக் கவர விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்காகத்தான் எம்.ஜி.ஆர். டாக்டர் என்று அறியப்பட்ட ஈஸ்வரனை முதல் கட்டமாககட்சிக்குள் இழுத்திருக்கிறார். இவரது தலைமையில் மருத்துவர் அணியை வலுவானஒரு அமைப்பாக உருவாக்க கேப்டன் மும்முரமாக உள்ளார்.

விஜயகாந்த்தின் இந்த மூவ் குறித்து தேமுதிகவினர் கூறுகையில், ஒரு கட்சியில்(பாமக), அதன் நிறுவனரும், அவரது மகனும் டாக்டர்கள்தான். மகன் மத்தியஅமைச்சராக உள்ளார். ஆனால் இதுவரை ஒரு இலவச மருத்துவ முகாமைக் கூடஇவர்கள் நடத்தியதில்லை.

ஆனால் கேப்டன் அப்படி இல்லை, கட்சியில் உருவாகப் போகும் மருத்துவர்அணியை வைத்து மக்களுக்காக உதவப் போகிறார் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+