அதிமுக பொருளாளரானார் தினகரன்-திண்டுக்கல் சீனிக்கு ஆப்பு
சென்னை:
அதிமுகவின் பொருளாராக இருந்து வந்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஜெயலலிதா கல்தா கொடுத்துள்ளார்.சீனியை தூக்கிவிட்டு அந்தப் பதவியில் சசிகலாவின் அக்காள் மகன் தினகரனை நியமித்துள்ளார்.
அதே போல பல கட்சிகள் கண்டு இப்போது அதிமுகவில் உள்ள மூத்த தலைவரான க.சுப்புவை அதிமுகவின்சட்டமன்றக் குழு ஆலோசகராக ஜெயலலிதா நியமித்துள்ளார்.தேர்தலில் அதிமுகவின் படுதோல்விக்குப் பின் நிர்வாகிகளை அதிரடியாக மாற்றி வருகிறார் முன்னாள் முதல்வர்ஜெயலலிதா.
இந் நிலையில் இது தொடர்பாக ஜெயலலிதா இன்று வெளியிட்ட அறிக்கை:
அதிமுக பொருளாளராக இருந்து வந்த திண்டுக்கல் சீனிவாசன் நீக்கப்படுகிறார். அவருக்குப் பதிலாக தினகரன்நியமிக்கப்படுகிறார்.
கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்து வந்த லியாகத் அலி கான் நீக்கப்படுகிறார். (இவர் விஜய்காந்தின்தீவிர ஆதரவாளராக இருந்து தேர்தலுக்கு முன் அதிமுகவில் சேர்ந்தார் என்பது நினைவுகூறத்தக்கது). இவர்அதிமுக சிறுபான்மைப் பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுபான்மைப் பிரிவின் தலைவராக பி.எச்.பாண்டியன், இணைச் செயலாளராக ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர்நியமிக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பின் செயலாளராக இருந்த லியாவுதீன் சேட் நீக்கப்படுகிறார்.
அதிமுக மாணவர் அணிச் செயலாளராக சக்திவேல் முருகன், தேர்தல் பிரிவு இணைச் செயலாளராக பாலகங்காஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
அதிமுகவின் சட்டமன்றக் குழு ஆலோசகராக க.சுப்பு நியமிக்கப்படுகிறார்.
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டச் செயலாளராகஆர்.விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாவட்டத்தின் அதிமுக அவைத் தலைவராக திண்டுக்கல்சீனிவாசன் நியமிக்கப்படுகிறார்.
கரூர் மாவட்டச் செயலாளராக இருந்து வரும் பழனிச்சாமி நீக்கப்படுகிறார். அவருக்குப் பதில் முன்னாள்அமைச்சர் சின்னச்சாமி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். (சின்னச்சாமி நெடுங்காலமாகஅதிமுகவில் ஓரங்கட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தார். அந்தப் பகுதியில் சொந்த செல்வாக்கு மிக்கவர்சின்னச்சாமி)
தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்டங்கள் இனி ஒரே மாவட்ட அதிமுகவாக இயங்கும். இந்த மாவட்டச்செயலாளராக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார்.
திருநெல்வேலி புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்ட அதிமுக அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே மாவட்டஅமைப்பாக இனி செயல்படும். இந்த மாவட்ட அதிமுக செயலாளராக செந்தூர் பாண்டியன் நியமிக்கப்படுகிறார்.
கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே மாவட்டக் கழகமாக செயல்படும்.இந்த மாவட்டத் தலைவராக பச்சைமால் நியமிக்கப்படுகிறார். அவைத் தலைவராக ராஜேந்திர பிரசாத்நியமிக்கப்படுகிறார்.
அதிமுக தேர்தல் பிரிவு இணைச் செயலாளராக பாலகங்கா நியமிக்கப்படுகிறார். (இவரை சமீபத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தூக்கினார் ஜெயலலிதா. இவருக்குப் பதில் சசிகலாவின்ஆசி பெற்ற கலைராஜனை நியமித்தார். இதனால் பாலகங்கா வெறுத்துப் போய் இருந்தது குறிப்பிடத்தக்கது)
இதுவரை தேர்தல் பிரிவு இணைச் செயலாளராக இருந்த ஆர்.விஸ்வநாதனுக்கு எந்தப் பதவியும் தரப்படவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications