வினாத்தாள் லீக்: கூடுதல் டிஜிபி, ஐஜியிடம் உண்மை கண்டறியும் சோதனை !!
பெங்களூர்:
தமிழகத்தில் காவலர் தேர்வு வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில், கூடுதல் டிஜிபிபாலச்சந்திரன், ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் பெங்களூரில் இன்று உண்மைகண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 2003ம் ஆண்டும், 2004ம் ஆண்டும் இருமுறை காவலர் தேர்வு வினாத்தாள்கள்லீக் ஆகின. இதில் பல காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்தவிவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு விசாரணையில் இருந்தபோதே, அப்போதைய டிஜிபி அலெக்சாண்டர் வீட்டில்வேலை பார்த்து வந்த காவலர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கும்வினாத் தாள் லீக் ஆனதற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. அவரை சர்ச்சைபுகழ் சிவணான்டி தான் விசாரித்தார்.
சிவணான்டியால் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் மர்மமாய் இறந்தார்அந்தக் காவலர். அவர் கொலை செய்யப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது.
வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில் அலெச்காண்டர், கூடுதல் டிஜிபி பாலச்சந்திரன்,ஐஜி ராதாகிருஷ்ணன் ஆகியோருடைய பெயர்கள் அடிபட்டன.
இதையடுத்து கூடுதல் டிஜிபி பால்சந்திரனும், ஐ.ஜி ராதாகிருஷ்ணனும் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர். இவர்களில் ராதாகிருஷ்ணன் மீண்டும் பணியில்சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை தற்போது ஐஜி துக்கையாண்டி தலைமையில் சிபிசிஐடி போலீஸார்விசாரித்து வருகின்றனர். 8 போலீஸார், 3 மாணவர்களை கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் கூடுதல் டிஜிபி பாலச்சந்திரன், ஐஜி ராதாகிருஷ்ணன் ஆகியோரைசிபிசிஐடி போலீஸார் இன்று பெங்களூர் அழைத்துச் சென்றனர்
மடிவாளாவில் உள்ள நார்கோ அனாலிஸ் ஆய்வகத்தில் வைத்து இவர்களிடம்உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications