சென்னை பள்ளிகளுக்கு மாணவி குண்டு மிரட்டல்!!
சென்னை:
சென்னையில் இன்று நான்கு பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக பெண் ஒருவர் மிரட்டல்விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 9 மணிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியபெண், சாலிகிராமத்தில் உள்ள காவேரி மேல்நிலைப்பள்ளி, ஜெயகோபால் கரோடியா மெட்ரிகுலேஷன் பள்ளி,தசரதபுரம் கரியப்பா மேல்நிலைப்பள்ளி, கலைஞர் சாலை கிளாரா பள்ளி ஆகியுவற்றில் வெடிகுண்டுகள்வைக்கப்பட்டுள்ளன.அவை சில மணி நேரங்களில் வெடிக்கும் எனக் கூறினார்.
இதையடுத்து நான்கு பள்ளிகளுக்கும் போலீஸார் விரைந்து சென்று மோப்ப நாய்கள், வெடிகுண்டுநிபுணர்களுடன் துருவித் துருவி சோதனை போட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
போன் எங்கிருந்து செய்யப்பட்டது என்று போலீஸார் விசாரித்தபோது, அது காவேரி பள்ளி அருகே உள்ளஎஸ்.டி.டி. பூத்திலிருந்து செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சீருடை அணிந்த ஒரு மாணவிதான் அந்தசமயத்தில் போன் செய்தது தெரிய வந்தது. அந்த சீருடை காவேரி பள்ளியின் சீருடையாகும்.
இதைத் தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவிகள் குறித்து போலீஸார் பள்ளியில் விசாரித்தபோது 2 பேர் வராததுதெரிய வந்தது. அந்த மாணவிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர்களுக்கும், வெடிகுண்டுமிரட்டலுக்கும் சம்பந்தம் இல்லை என்பது தெரிய வந்தது.
மிரட்டல் விடுத்த மாணவி யார் என்று போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந் நிலையில் பர்மா பஜாரில் 2 மோட்டார் சைக்கிள்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்ததால்போலீஸார் அங்கு சோதனை நடத்தினர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications