வெடிகுண்டு மிரட்டல்: சிவக்குமார், சூர்யாவிடம் போலீஸ் விசாரணை
சென்னை:
நடிகர் சிவக்குமார் வீட்டில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், தி.நகரில் வெடிகுண்டுவெடிக்கும் என்றும் மிரட்டல் விடுத்த மலேசிய நபரைப் பிடிக்க போலீஸ் தனிப்படைவிரைவில் மலேசியா செல்லவுள்ளது.
அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு சில நாட்களுக்கு முன்பு போனில் பேசியஒருவர் தி.நகரில் குண்டு வெடிக்கப் போகிறது.
இதைச் செய்வதற்காக 5 தீவிரவாதிகள் வந்துள்ளனர். அவர்கள் இந்த தொலைபேசிஎண் உள்ள வீட்டில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
![]() |
மேலும் அந்த நபர் கொடுத்த தொலைபேசி எண்ணுக்குரியவர் நடிகர் சிவக்குமார்என்று தெரிய வந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து சிவக்குமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், தனக்கு கடந்த 15நாட்களாக மலேசியாவைச் சேர்ந்த காசி டத்தோ என்ற ரசிகர் போன் செய்து கதைகேட்குமாறு வற்புறுத்தி வருவதாகவும், அதை தான் ஏற்காததால், கோபமடைந்துஇவ்வாறு கொடுத்திருக்கலாம் என சிவக்குமார் தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸாருக்கு நிம்மதி ஏற்பட்டது. மேலும், தன் மீது கொண்ட அன்புகாரணமாக இவ்வாறு அந்த நபர் செய்திருக்கலாம், எனவே அவரை மன்னித்து விட்டுவிடுங்கள் என்றும் சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும் போலீஸார் மன்னிப்பதாக இல்லை.தேவையில்லாமல் போலீஸாரைஅலைக்கழித்து விட்ட அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவரைப் பிடிக்க விரைவில் தனிப்படை ஒன்று மலேசியாவுக்கு செல்லவுள்ளது. இந்தநிலையில் சிவக்குமார் வீட்டுக்கு நேற்று மாலை போலீஸார் சென்றனர். அங்கு சுமார் 2மணி நேரம் சிவக்குமார் மற்றும் சூர்யாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணைக்கு சிவக்குமாரும், சூர்யாவும் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகபோலீஸார் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications