பாம்பு விஷத்தை செலுத்தி மனைவியைக் கொல்ல முயன்ற கணவன்!
கோவை:
வரதட்சணை கேட்டு மனைவியின் உடலில் பாம்பு விஷத்தை செலுத்திய கொடூரக்கணவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கும்கோவையைச் சேர்ந்த சுமதி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணம்நடந்தது. இவர்களுக்கு கோமகள் என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.
![]() |
அங்கு சென்ற சில நாட்களில் தனது மனைவியை பாம்பு கடித்து விட்டதாக கூறிமருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மயங்கிய நிலையில் இருந்த சுமதிக்குசிகிச்சை தரப்பட்டது. சுமதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அவர்களுக்கு சேகர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சேகர்மீது எருமைப்பட்டி போலீஸில் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து சேகர்தலைமறைவாகி விட்டார்.
சுமதியை அவரது பெற்றோர் கோவைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.சிகிச்சையில் தேறிய அவர் தனது கணவர் செய்த கொடுமையை விவரித்துக் கூறினார்.சுமதி கூறுகையில், கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை கணவர் கொடுமைப்படுத்திவந்தார். மேலும் எனது தங்கைக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதை அறிந்த அவர்எப்படியாவது திருமணத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்தார்.
இதற்காக பாம்பின் விஷத்தை ஊசி மூலம் எனது உடலில் செலுத்தினார்.
பின்னர் விஷம் எடுக்கப்பட்ட அந்தப் பாம்பை கொன்று விட்டார். நான் இறந்துவிடுவேன் என்றுதான் அவர் நினைத்தார். ஆனால் கடவுள் அருளால் நான் பிழைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் சுமதி.
இதையடுத்து சேகர் மீதான வழக்கை கோவைக்கு மாற்றி திண்டுக்கல் போலீஸார்நடவடிக்கை எடுத்துள்ளர். சேகர் மீது வரதட்சணைக் கொடுமை, கொலை முயற்சிவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications