தமிழக மக்களை ஏமாற்றும் பட்ஜெட்: ஜெ.
சென்னை:
வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் திமுக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் கானல் நீராக காட்சி அளிக்கின்றன. தமிழகமக்களை ஏமாற்றும் பட்ஜெட் இது என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாகூறியுள்ளார்.
பட்ஜெட் குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், இந்த நீண்ட உரை பேரவையில் வெறும் இரைச்சலும், சப்தமும்உண்டாக்கியதே தவிர இது ஒரு வெற்றான நிதி நிலை அறிக்கை ஆகும்.திமுக தனது தேர்தல் அறிக்கையில், கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்கமுயன்று இருக்கிறது. ஆனால் பல திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதே உண்மை.
உதாரணத்திற்கு, விவசாயிகளின் கூட்டுறவுக் கடனான ரூ. 6,866 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக அறிக்கையில்கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகளுக்கு ஈடாகக் கொடுக்க ரூ.1435 கோடி மட்டுமேஒதுக்கப்பட்டுள்ளது.
இது கூட்டுறவு வங்கிகளை இக்கட்டான நிலைக்குத் தள்ளுவதோடு, விவசாயிகளுக்கு இந்த ஆண்டு புதிதாக கடன்களைவழங்க முடியாத நிலையிலும் கூட்டுறவு வங்கிகளைத் தள்ளி விடும். தேவைப்படும் நேரத்தில் புதிய கடன்களை விவசாயிகள்பெற முடியாத நிலை ஏற்படும்.
வாட் வரி விதிப்பு, சிறு வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் அதுகுறித்து தீவிரப் பரிசீலனைக்குப் பிறகு முடிவுஎடுக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஆனால் இப்போது திடீரென ஜனவரி 1ம் தேதி முதல்அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள், சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
அதிக வருவாய் வரவு இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தாலும், வருவாய் பற்றாக்குறை ரூ. 1129 கோடி என்று கணக்குகாட்டப்பட்டுள்ளது. எனவே இதை கடன் வாங்கியே சமாளிக்கும் நிலை ஏற்படும். இதனால் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும்நிலை உருவாகும்.
மொத்தத்தில் இது வளர்ச்சித் திட்டங்களை கானல் நீராகக் காட்டும் பட்ஜெட், மக்களை ஏமாற்றும் பட்ஜெட் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.
குறையொன்றுமில்லை-ராமதாஸ்: திமுக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றுபாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளைவழங்குவதும், ஜெயித்து ஆட்சியைப் பிடித்த பிறகு அவற்றை மறந்து விடுவதுதான் இதுவரை நடந்து வந்திருக்கிறது.
ஆனால் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை அப்படியே பட்ஜெட்டிலும் இடம்பெற வைத்து தான் சொன்னதைமெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் கருணாநதி. திமுக தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமின்றி பாமக உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் வாக்குறுதிகளையும் இந்த பட்ஜெட்டில் சேர்த்துள்ளார் கருணாநிதி.
அரசு ஊழியர்களுக்கு சலுகைகள், புதிய வரிகள் கிடையாது, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதாந்திர நிதியுதவி,நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம், உணவுப் பொருட்களுக்கு இனி வரிவிதிப்பு இல்லை, சிட்டா நூலுக்கு வரி விலக்கு, மறுவரி விதிப்பே கிடையாது, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, வட்டி தள்ளுபடி என பல நல்ல அம்சங்கள் இடம்பெற்றுள்ள இந்தபட்ஜெட்டை பாமக வரவேற்கிறது. குறை சொல்லவே முடியாத பட்ஜெட் இதுஎன்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications