For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியா பிரதமராக வேண்டும்: கருத்துக்கணிப்பு

By Staff
Google Oneindia Tamil News

புதுடெல்லி:

மன்மோகன் சிங் நல்ல பிரதமராக இருந்தாலும், அவருக்குப் பதில் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்கவேண்டும் என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

சிஎன்என்-ஐபிஎன் டிவியும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தின.இந்தியாவின் 18 மாநிலங்களில், 1884 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 46 சதவீதம் பேர்பெண்கள், 65 சதவீதம் பேர் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இக்கருத்துக் கணிப்பில், பிரதமர் மன்மோகன் சிங்கின் செயல்பாடுகள் எப்படி என்ற கேள்விக்கு 56 சதவீதம் பேர்திருப்தி அளிப்பதாக கூறியுள்ளனர். 18 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்று தெரிவித்துள்ளனர். எந்தக் கருத்தும்சொல்லாதவர்கள் எண்ணிக்கை 26 சதவீதமாகும்.

மன்மோகன் சிங்குக்கு 100க்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு பொதுமக்கள் 68மதிப்பெண்களும், காங்கிரஸ் கட்சியினர் 74 மதிப்பெண்களும், இடதுசாரியினர் 73 மதிப்பெண்களும்,பாஜகவினர் 56 மதிப்பெண்களும் கொடுத்துள்ளனர்.

மத்திய அரசில் முக்கிய முடிவுகளை எடுப்பது யார் என்ற கேள்விக்கு சோனியாதான் என்று 24 சதவீதம் பேர்தெரிவித்துள்ளனர். அத்தனை முடிவுகளையும் சோனியாதான் எடுக்கிறார் என்று 22 சதவீதம் பேரும் கருத்துதெரிவித்துள்ளனர்.

மன்மோகன்சிங் தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார் என்று வெறும் 8 சதவீதம் பேர்தான் கருத்துதெரிவித்துள்ளனர். பதில் சொல்ல முடியவில்லை என்று 47 சதவீதம் பேர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மன்மோகன் சிங் மரியாதைக்குரியவர் என்று 64 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இல்லை என்று 8 சதவீதம்பேரும் தெரிவித்துள்ளனர். புத்திசாலி என்று 61 சதவீதம் பேரும், நல்ல தலைவர் என்று 33 சதவீதம் பேரும்கருத்து தெரிவித்துள்ளனர். உறுதியான தலைவர் இல்லை என்று 33 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

ஏழைகளுக்கு சாதகமான பிரதமர் என்று 34 சதவீதம் பேரும், இல்லை என்று 37 சதவீதம் பேரும் கருத்துதெரிவித்துள்ளனர். கொள்கை முடிவுகளில் பிரதமரின் செயல்பாட்டில் பொதுமக்களிடையே திருப்தி இல்லைஎன்றும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிரதமரின் செயல்பாடு வெற்றி அடைந்திருப்பதாக 28 சதவீதம் பேரும், தோல்விஎன 24 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்கவில்லை என 38 சதவீதம் பேரும், அப்பிரச்சினையை சரியாக கையாண்டிருப்பதாக 22 சதவீதம் பேரும்தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதத்தை அடக்குவதில் வெற்றி கண்டிருப்பதாக 22 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்தள்ளனர்.ஆனால் தோல்வி அடைந்திருப்பதாக 39 சதவீதம் பேர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

விலைவாசி ஏற்றம்தான் மக்களை கடுமையான அதிருப்திக்குள்ளாக்கியதும் இதில் தெரிய வந்துள்ளது. 56சதவீதம் பேர் விலைவாசி உயர்வை மன்மோகன் சிங் கட்டுப்படுத்தத் தவறி விட்டதாக குறியுள்ளனர். 17 சதவீதம்பேர் மட்டுமே விலை வாசி உயர்வை மன்மோகன் கட்டுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மன்மோகனுக்குப் பதில் ராகுல்காந்தியை பிரதமராக்கலாமா என்ற கேள்விக்கு 41 சதவீதம் பேர் கூடாது என்றுபதில் அளித்துள்ளனர். 31 சதவீதம் பேர் ஆக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 29 சதவீதம் பேர் கருத்துசொல்லவில்லை.

காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் ராகுலை பிரதமராக்க 40 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம்31 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தியைத் தவிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேறுயாரையாவது பிரதமராக்கலாமா என்ற கேள்விக்கு 40 சதவீதம் பேர் கூடாது என்று கூறியுள்ளனர்.

அதேசமயம், மன்மோகனுக்குப் பதில் சோனியாவை பிரதமர் பதவியில் அமர்த்தலாமா என்ற கேள்விக்கு கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 52 சதவீதம் பேர் சரி என்று கூறியுள்ளது குறிப்பிடத்ததக்கது. 30 சதவீதம்பேரை இதை எதிர்த்துள்ளனர்.

ஆட்சியில் சோனியா காந்தியின் தலையீடு இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு அதில் தவறில்லை என்று36 சதவீதம் பேரும், சோனியாவை மன்மோகன் சிங் கண்டுகொள்ளக் கூடாது என்று 18 சதவீதம் பேரும் கருத்துதெரிவித்துள்ளனர். 47 சதவீதம் பேர் பதில் சொல்ல மறுத்துள்ளனர்.

இந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் மன்மோகன் சிங் நல்ல பிரதமர் என்று தெரிய வந்துள்ள அதே நேரத்தில்உறுதியான தலைவராக அவர் இல்லை என்பதும் புரிய வந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி, கட்சித்தலைமையின் நெருக்கடி என பலனைத் தாக்குதல் காரணமாகவே அவரால் உறுதியான தலைவராக செயல்படமுடியாமல் போயுள்ளது என்பதை அனுமானிக்க முடியும்.

இருப்பினும் மன்மோகனை விட சோனியா காந்தி நல்ல பிரதமராக இருப்பார் என்ற புதிய தகவல் இந்த கருத்துக்கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X